250 கோடி பிஸ்னஸ்… அதுவும் ரிலீஸுக்கு முன்பே – கலக்கும் புஷ்பா!

0
Follow on Google News

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வருகிறது புஷ்பா திரைப்படம். இந்த படத்தில் பஹத் பாசில் வில்லனாக நடிக்க சுகுமார் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தில் ஒரு சர்ப்ரைஸாக ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளதாம் படக்குழு.

இதை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறதாம் படக்குழு. அந்த பாடல் படத்தின் முக்கியக் காரணிகளில் ஒன்றாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படம் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாவதால் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்த படம் ரிலீஸுக்கு முன்னதாகவே அனைத்து மொழிகளிலும் திரையரங்கு, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் என அனைத்து வகையிலும் சேர்த்து 250 கோடி ரூபாய்க்கு பிஸ்னஸ் செய்யப்பட்டுள்ளதாம். அல்லு அர்ஜுனின் படங்களிலிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி அதிக பிஸினஸ் செய்யப்பட்ட படம் இதுதானாம்.