இன்றைய (23-05-2021) ராசி பலன்கள்

0
Follow on Google News

மேஷம் : உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது நல்லது. உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பகையை தவிர்க்க இயலும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : அனுகூலமான நாள்.
பரணி : அனுசரித்து செல்லவும்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

ரிஷபம் : புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் அகலும். எழுத்து பணிகளில் இருப்பவர்களுக்கு புதுமையான சிந்தனைகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கிருத்திகை : தாமதங்கள் அகலும்.
ரோகிணி : மாற்றங்கள் ஏற்படும்.
மிருகசீரிஷம் : குழப்பங்கள் அகலும்.

மிதுனம் : மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வாகனங்களின் மூலம் லாபம் மேம்படும். தாய்வழி உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். நறுமணப் பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : லாபம் மேம்படும்.
திருவாதிரை : ஒற்றுமை உண்டாகும்.
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

கடகம் : மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். உங்களின் மீதான சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : குழப்பங்கள் மறையும்.
பூசம் : மேன்மையான நாள்.
ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.

சிம்மம் : கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபகமறதி ஏற்பட்டு நீங்கும். கூட்டாளிகளின் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஆடம்பரப் பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : லாபகரமான நாள்.
உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.

கன்னி : மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்கள் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.
அஸ்தம் : எண்ணங்கள் மேம்படும்.
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

துலாம் : எதிர்பாராத பயணங்களின் மூலம் உடல் சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். கால்நடைகள் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி அதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : சோர்வுகள் நீங்கும்.
சுவாதி : முதலீடுகள் மேம்படும்.
விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

விருச்சகம் : குடும்ப பெரியவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் ஈடேறும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்பட்டால் நன்மை ஏற்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகளும், விருப்பங்களும் உண்டாகும். எதிர்பாலின மக்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : அனுகூலமான நாள்.
அனுஷம் : மாற்றங்கள் ஏற்படும்.
கேட்டை : ஆசைகள் உண்டாகும்.

தனுசு : மறைத்து வைக்கப்பட்ட சில பொருட்கள் கிடைக்கும். ஆடை மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி கொண்டிருந்த வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த அபிவிருத்திக்கான எண்ணங்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : பொருட்கள் கிடைக்கும்.
பூராடம் : காலதாமதம் உண்டாகும்.
உத்திராடம் : தீர்வு கிடைக்கும்.

மகரம் : புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான எண்ணங்கள் மேம்படும். நண்பர்களுடன் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். தந்தை வழியில் வரவேண்டிய தனவரவுகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு பயணங்களை மேற்கொண்டு மனம் மகிழ்வீர்கள். பணப்புழக்கங்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : எண்ணங்கள் மேம்படும்.
திருவோணம் : தனவரவுகள் கிடைக்கும்.
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.

கும்பம் : கடன் தொடர்பான பிரச்சனைகளை நிதானமாக கையாளவும். மற்றவர்களிடம் கோபங்களை விடுத்து பொறுமையுடன் செயல்பட வேண்டும். எண்ணிய காரியங்களை செய்து முடிப்பதில் சோம்பலும், காலதாமதமும் ஏற்படும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். பங்கு வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் சற்று பொறுமையுடன் முடிவு செய்வது நன்மையை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : நிதானம் வேண்டும்.
சதயம் : சோம்பல் ஏற்படும்.
பூரட்டாதி : நெருக்கடியான நாள்.

மீனம் : மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன்களை அளிக்கும். வாழ்க்கைத்துணைவருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். நிர்வாகத்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.