57 வயதில் ஆறாவது குழந்தை… தந்தையான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

0
Follow on Google News

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி தம்பதிகளுக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் பிரதமராக செயல்பட்டு வரும் போரிஸ் ஜான்சன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போல சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர்.

கொரோனா தொற்றை சரியாக கையாலாத பிரதமர் என்று அவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது அவருக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி தம்பதிகளுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. 57 வயதாகும் போரிஸ் ஜான்சனுக்கு இது ஆறாவது குழந்தையாகும்.