தர்ம சங்கடத்தில் இருந்த அண்ணாமலைக்கு தோளோடு தோளாக நின்ற திருமாறன் ஜி… மதுரையில் வேட்பாளர் மாற்றத்தில் நடந்த கடைசி நேர ட்விஸ்ட்…

0
Follow on Google News

தென் மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்க கூடிய முக்குலத்தோர் சமூகத்தினர் மத்தியில் மட்டுமில்லாமல், அணைத்து சமூகத்தினர் மத்தியிலும் ஒரு சமூக நல்லிணக்கத்துடன் செயல்பட்டு, தென்மாவட்ட அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருகின்றவர் தென் இந்திய பார்வேர்ட் ப்ளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் ஜி.

தொடர்ந்து பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் திருமாறன் ஜி, கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான கள பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வந்தார். பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்பு, தமிழகத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய மரியாதையை அளித்து வர கூடியவர் அண்ணாமலை.

அந்த வகையில் முக்குலத்தோர் சமூகத்தினர் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கி வரும் திருமாறன்ஜிக்கு தகுந்த மரியாதையை பாஜக அண்ணாமலை அளிக்க, அதற்கு விசுவாசமாக தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை மட்டுமின்றி, அண்ணாமலை கலந்து கொள்ளும் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் அடையாளமாக திகழும் புலி கொடியுடன் தன்னுடைய கட்சி தொண்டர்களை அந்த நிகழ்ச்சியில் களம் காண செய்தார் திருமாறன் ஜி.

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மதுரையில் போட்டியிட இருக்கும் தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் மதுரை ஒத்தக்கடையில் தென்இந்திய பார்வேர்ட் ப்ளாக் கட்சியின் சார்பில் கடந்த மாதம் மிக பிரமாண்ட மாநாடு நடத்தி தன்னுடைய பலம் என்ன என்பதை நிரூபித்தும் காட்டினார் திருமாறன் ஜி. அந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலையின் நம்பிக்கை கூறியவராக திகழ்ந்த திருமாறன் ஜி வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதுரை பாராளுமண்ட தேர்தலில் போட்டியிடுவார் என கிட்ட தட்ட உறுதி செய்யப்பட்டிருந்தது.

மேலும் தகுதியான நபர்கள் யார் என அடையலாம் கண்டு அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் பாஜக தலைவர் அண்ணாமலை கூட்டணி கட்சி என்கிற முறையில் தென் இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சிக்கு மதுரை தொகுதியை பெற்று தருவதற்கு டெல்லி பாஜக தாழ்மையிடமும் முன் மொழித்துள்ளார் என்கிற தகவல் வெளியானதை தொடர்ந்து. பல முக்கிய சேனல்களில் மதுரை பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றார் திருமாறன் ஜி.

வேட்பாளர் பட்டியலில் இறுதி செய்யும் இறுதி கட்ட பணியில் பாஜக தலைமை தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கையில், பாஜக சீனியர் தலைவர் ஒருவர் திருச்சி தொகுதியை கேட்டு அங்கே தேர்தல் பணியாற்றி வந்த நிலையில், திருச்சியில் உள்ள பாஜக முக்கிய நிர்வாகி அந்த சீனியர் தலைவர் அவருடைய தொகுதியில் போட்டியிடட்டும் என திருச்சியில் போட்டியிட எதிர்ப்பு தெரிவிக்க அந்த சீனியர் தலைவர் திருச்சியில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் அந்த சீனியர் தலைவருக்கு திருச்சிக்கு பதில் மதுரை தொகுதியை ஒதுக்கினால், ஏற்கனவே அங்கே இரண்டு வருடங்களாக பணியாற்றி கொண்டிருக்கும் திருமாறன் ஜி என்ன நினைப்பர் என பாஜக தலைவர் அண்ணாமலை தர்ம சங்கடத்தில் இருப்பதை அறிந்த திருமாறன் ஜி, அவரே முன் வந்து, பாஜக தலைவர் அண்ணாமலையிடம் நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு மகிழ்ச்சி தான்.

தேசியமும் தெய்விகமும் எனது இரண்டு கண்கள் என முழுக்க முழுக்க திராவிடத்தை எதிர்த்த பசும்பொன் தேவர் அவர்களின் கொள்கையை தாங்கி பிடித்திருக்கும் நங்கள் உங்களுடன் மட்டுமே பயணிப்போம் அண்ணா என தர்மசங்கடத்தில் இருந்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஒரு சகோதரனாக தோளோடு தோளாக நின்று தனக்கு வரவேண்டிய மதுரை பாராளுமன்ற தொகுதியை விட்டு கொடுத்து, மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெரும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட, பாஜக தலைவர் அண்ணாமலை மனதை வென்று விட்டார் திருமாறன் ஜி என்கிறது அரசியல் வட்டாரங்கள்.