ஒரே நாளில் தன்னுடைய வெற்றியை உறுதி செய்த ராதிகா சரத்குமார்.. விருதுநகர் தேர்தல் களம் நிலவரம் இதோ…

0
Follow on Google News

தமிழக பாராளுமன்ற தேர்தல் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவதால், அந்த தொகுதி VIP தொகுதியாக மாறியுள்ளது. தேர்தலுக்கு முன்பு மிக குறுகிய காலத்தில் தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைந்தார் சரத்குமார், கட்சியை இணைந்த சரத்குமார் மனைவி ராதிகா சரத்குமாருக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பை வழங்கியது பாஜக.

மண்ணின் மைந்தரா.? மண்ணுக்கான மைந்தரா.? என்கிற சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்காமல், விருதுநகர் தொகுதியின் மண்ணை பூர்விகமாக கொண்டவரும், தென் தமிழ்கத்தில் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவருமான சரத்குமார் மனைவி ராதிகா சரத்குமாருக்கு விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கொடுத்து, மண்ணின் மைந்தரா.? மண்ணுக்கான மைந்தரா.? என்கிற கேள்விகளுக்கெல்லாம், இவர் இந்த மண்ணின் பாரம்பரம்பரியத்துக்கு சொந்தக்காரர் என்கிற பதிலடியாக அமைத்துள்ளது சரத்குமார் மனைவி ராதிகா சரத்குமார் பாஜக சார்பில் விருதுநகர் தேர்தல் களத்தில் வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிகழ்வு.

இந்நிலையில் பாஜக வேட்பாளராக தன்னுடைய தேர்தல் பணியை விருதுநகர் தொகுதியில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் காலை முருகனை வழிபட்டு, தொடங்கிய ராதிகா சரத்குமார்க்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது, திருப்பரங்குன்றம், திருமங்கலம், அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், சிவகாசி என ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று பாஜக நிர்வாகிகளை சந்தித்த ராதிகா சரத்குமாருக்கு உற்சாக வரவேற்பை பாஜக தொண்டர்கள் அளித்து வந்ததை பார்க்க முடிந்தது.

சிவகாசி பாஜக அலுவலகத்திற்கு ராதிகா சரத்குமார் வருகிறார் என்கிற தகவல் அறிந்து அங்கிருந்த பொதுமக்கள் பெருமளவில் கூட தொண்டங்கினார்கள், சிவகாசி பாஜக கட்சி அலுவலகத்தில் உள்ளே சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து விட்டு வெளிய வந்த ராதிகா சரத்குமாருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது, ஆம், சிவகாசி பாஜக அலுவலகத்தில் ராதிகா சரத்குமார் உள்ளார் என்கிற தகவலால், அந்த பகுதி பெண்களை பெருமளவு பாஜக கட்சி அலுவலகத்திற்கு முன்பு கூடியிருந்தனர்.

இதனை தொடர்ந்து அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த ராதிகா சரத்குமாரை பார்த்து அங்கே வெளியே காத்திருந்த பொதுமக்கள் கரகோஷத்துடன் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்ய, கட்சி அலுவலக பால்கனியில் இருந்தபடியே தன்னுடைய பேச்சை தொடங்கினார் சரத்குமார், பின்பு ராதிகா சரத்குமார் பேச தொடங்கினார், சூரியவம்சம் திரைப்படத்தில் தனது மனைவியை படிக்க வைத்து பெரிய ஆளாக்கி அழகு பார்க்கும் சின்ராசுவை போல அரசியலிலும் கூட என்னால் இதற்கும் மேலான பொறுப்புகளை எடுத்துச் செய்ய முடியும் என நம்பிக்கையூட்டி மனைவியான என்னை பெரியாளாக்குவதற்கு பக்கபலமாக சரத்குமார் உழைத்துக் கொண்டிருக்கிறார் என பேசியவர்.

இனி சிவகாசி பகுதியில் உள்ள பாட்டசு தொழிலாளர்கள் ஒருவர் கூட பாட்டாசு விபத்தில் உயிர் இழக்க கூடாது, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நான் வெற்றி பெற்றால் நிச்சயம் செய்வேன் என உறுதி யளித்தார் ராதிகா சரத்குமார் பேசி கொண்டிருக்கையில் அந்த வழியாக சென்ற பேருந்தில் அமர்ந்து இருந்த பெண்கள், பேருந்து வெளியே எட்டி பார்த்து ராதிகா சரத்துக்குமாரை பார்த்து கை அசைத்து உற்சாகமாக அவர்களின் ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

மேலும் ராதிகா சரத்குமார் மற்றும் அவருடைய கணவர் சரத்குமார் இருவரும் அரசியல் அனுபவம் கொண்டவர், இதற்கு முன்பு தேர்தல் காள்பணியாற்றியவர், இதில் சரத்குமார் நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பதால், மிக சிறப்பாக கட்சி நிர்வாகிகளையும், தேர்தல் யுக்திகளையும் கையாண்டு வருவது, விருதுநகர் தொகுதி மக்களிடம் அவர்களுக்கு கிடைத்து வரும் ஆதரவு, மேலும் குறிப்பாக விருதுநகர் தொகுதி மண்ணின் பாரம்பரியத்துக்கு சொந்தக்காரரான சரத்குமார் மனைவி ராதிகா சரத்குமாருக்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருப்பதை தேர்தல் களத்தில் பார்க்க முடிகிறது. மேலும் விருதுநகர் பாஜக மாவட்ட தலைவர்களான பெண்டகன் பாண்டுரங்கன், சரவணராஜா மற்றும் விருதுநகர் தேர்தல் பொறுப்பாளர் வெற்றிவேல் போன்றார் மிக சிறப்பாக வேலை செய்து வந்துள்ளதை அந்த தொகுதி மக்கள் மத்தியில் பாஜகவுக்கு இருக்கும் ஆதரவு மூலம் பார்க்க முடிகிறது.