அண்ணாமலையிடம் கையும் களவுமாக மாட்டிய சரவணன்… தப்பிக்க வழியின்றி திமுகவுக்கு தாவும் சம்பவம்.

0
Follow on Google News

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் சீட் கிடைக்கவில்லை என்பதற்காக திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து மதுரை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவியவர் டாக்டர் சரவணன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியிருந்தாலும் சரவணனுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் பாஜகவில் வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் மதுரை நகர் மாவட்ட பாஜக தலைவராக சரவணன் அறிவித்தது பாஜக தலைமை. பொதுவாக பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை வந்த பின்பு அனைத்து மாவட்ட தலைவர்களுக்கும் முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர்கள் தங்கள் மாவட்டத்திற்குள் ஒரு அதிகாரம் மிக்கவர்களாக கட்சியின் வளர்ச்சிக்கு சுதந்திரமாக செயல்பட மாநில தலைவர் அண்ணாமலை சுதந்திரம் வழங்கியிருந்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள பிற மாவட்ட பாஜக தலைவர்கள் அண்ணாமலை கொடுத்த அந்த சுதந்திரத்தை கட்சியின் வளர்ச்சிக்காக தங்கள் அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் மதுரை நகர் மாவட்ட பாஜக தலைவர் சரவணன் தனது அதிகாரத்தை சுயநலத்திற்காக தன்னை முன்னிலைப்படுத்த பயன்படுத்தி மதுரை மாவட்டத்தில் பல வருடங்கள் கட்சிக்காக உழைத்தவர்களை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு தனக்கான ஆட்களை கட்சி பொறுப்புகளில் நியமித்தார்.

மதுரை மாவட்டத்தில் தனது பேச்சாற்றலாலும், கிளை வாரியாக கட்சியை வலுப்படுத்த கள பணியில் ஈடுபட்டுவந்தவருமான பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசனை ஒரு எதிரி போன்று அவருக்கு எதிராக செயல்பட்டு வந்த சரவணன், அவருடன் மரியாதை நிமித்தமாக கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்து கொண்டால் கூட அவர்களை கட்சி பொறுப்பில் இருந்து மாற்றி உள்ளார்.

மேலும் சாதிஅடிப்படையில் பொறுப்பு வழங்குவது, பதவிக்கு வசூல் வேட்டை நடத்தி வந்தது என இது தொடர்பாக மதுரை நகர் மாவட்ட தலைவர் சரவணன் மீது பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தொடர்ந்து மதுரை நகர் மாவட்ட கட்சி நிர்வாகிகள் புகார் தெரிவித்து வந்தனர். ஒரு கட்டத்தில் சரவணன் செயல்பாடுகள் மீது மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தன்னுடைய தில்லாலங்கடி வேலை மாநில தலைவர் அண்ணாமலை கவனத்திற்கு சென்று விட்டதை அறிந்த சரவணன். இனி சிரித்து சிரித்து அண்ணாமலையை ஏமாற்ற முடியாது என உணர்ந்த சரவணன், பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைவது குறித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திமுக முக்கிய புள்ளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது தொடர்பாக நாளிதழில் செய்தியும் வெளியானது.

ஆனால் திமுகவில் இணைவதற்காக உத்தரவு திமுக முக்கிய புள்ளிகளிடம் இருந்து வரும் வரை காத்திருந்த சரவணன். நேற்று மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் பாஜக நிர்வாகி இடையில் நடந்த வாக்குவாதம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. இந்த பிரட்சனை தொடர்பாக அன்று மதியம் பி.டி.ஆர் மீது தான் தவறு உள்ளது என மிக கடுமையாக விமர்சனம் செய்து பேட்டியளித்தார் சரவணன்.

அடுத்த சில மணி நேரத்தில் பி.டி.ஆர் வீட்டிற்கு சென்று அவரை புகழ்ந்து பேசிய சரவணன், பாஜக மீது கடுமையாக குற்றசாட்டியுள்ளார். மேலும் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள சரவணன் திமுகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னை முன்னிலைப்படுத்த பாஜகவில் தனக்கு கொடுத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அண்ணாமலையிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட சரவணன், பொய் சொல்லி தப்பிக்க வழியின்றி திமுகவுக்கு தவியுள்ளார் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

கருணாநிதி நினைவு சின்னம் ….தமிழனை படுத்தும் அவமானம் ….வெளுத்து வாங்கிய பேராசிரியர்…