2000 பேர் சாப்பாடு… 600 வகை சீர் வரிசை…திருவாரூரை கலக்கிய பூப்புனித நீராட்டு விழா.. இப்டியெல்லாமா செய்வாங்க..?

0
Follow on Google News

திருவாரூர் : நாகரிகம் என்ற போர்வையில் தமிழ்கலாச்சாரம் மெல்ல மெல்ல அழித்துக்கொண்டு வருகையில் கிராமங்கள் மட்டுமே தமிழர் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் உயிர்ப்பித்துக்கொண்டிருக்கின்றன. இடதுசாரிகள் மற்றும் தாராளவாதிகள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கலாச்சாரத்தை தாக்கியும் அவமதித்தும் பேசி வருகையில் கிராமவாசிகள் மட்டுமே தங்கள் பண்பாட்டை காத்து இன்னும் நிலைத்து நிற்கின்றனர்.

இந்நிலையில் தந்தை இல்லாத மகளுக்கு சொந்த அத்தை செய்த சீர் வரிசை அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. திருவாரூர் கீழவீதியை சேர்ந்த அட்சய ரத்னா என்பவரின் தந்தை முருகன். இவர் அட்சய ரத்னா சிறுகுழந்தையாக இருந்தபோதே இறந்துவிட்டார். அவர் வீட்டில் வேலை செய்கையில் தலையில் அடிபட்டு மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை பலனில்லாமல் இறந்துபோனார். இதனால் அட்சய ரத்னா குடும்பம் மிக வறுமையில் வாழ்ந்துவந்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது அட்சய ரத்னா பூப்படைந்துள்ளார். இதையறிந்த முருகனின் சகோதரிகள் நிகழ்ச்சியை கோலாகலமாக கொண்டாட முடிவெடுத்தனர். மஞ்சள் நீராட்டு விழாவை ஊரறிய நடத்தவேண்டும் என விரும்பினார்.

அதைத்தொடர்ந்து திருவாரூரில் மிகப்பெரிய தனியார் மண்டபத்தை வாடகைக்கு எடுத்தனர். 2000 பேருக்கு உணவளித்தது மட்டுமல்லாமல் 600 சீர்வரிசை தட்டுக்களுடன் லாரியில் சீர்வரிசை அனுப்பப்பட்டது. அதேநேரத்தில் வண்ணவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட லாரியில் கேரள செண்டை மேளங்கள் வாத்தியங்கள் முழங்க அட்சய ரத்னாவை ஊர்வலமாக அழைத்துவந்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் சமுக வலைத்தளங்களில் வீடியோவாக பகிரப்பட்டுள்ளது. இது நெட்டிசன்கள் மனதை உருக்குவதாக அமைந்தது. கூட்டுக்குடும்பம் என்ற ஒன்று அழிந்துவரும் நேரத்தில் அண்ணன் இறந்தபின்னரும் அவரது மகளுக்காக இப்படி தடல்புடலாக ஊரே வியக்கும் வண்ணம் அத்தைகள் கொண்டாடியிருப்பது பலரையும் நெகிழ வைத்துள்ளது.