பத்து தொகுதிகளுக்கு மேல் அதிமுக டெபாசிட் காலி… மாஸ் காட்டும் பாஜக… தமிழக தேர்தல் களத்தின் ரியாலிட்டி இது தான்….

0
Follow on Google News

மும்முனை போட்டி என எதிர்பார்க்கப்பட்ட தமிழக நாடாளுமன்ற தேர்தல் களம், இரன்டு முனை போட்டியாக மாறி வருவதை பார்க்க முடிகிறது. சுமார் 60 வருட தமிழக அரசியலில் இதற்கு முன்பு எப்பபோதும் இல்லாத அளவுக்கு தமிழக மக்கள் மத்தியில் மிக பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. ஜெயலலிதா மறைவுக்கு பின்பு ஆட்சியில் இருந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக 5 வருடம் ஆட்சியை மத்திய பாஜக தயவு இல்லாமல் நிறைவு செய்திருக்க முடியாது.

அப்படி 5 வருடம் பாஜக தயவில் ஆட்சி நடத்திய எடப்பாடி, தன்னை ஒரு ஆளுமை என்று நினைத்து கொண்டு தொடர்ந்து பாஜகவை உதாசீன படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததை எந்த ஒரு பாஜக தொண்டர்களும் விரும்பவில்லை, மேலும் எடப்பாடி உடன் கூட்டணியில் பாஜக இருப்பதை தமிழக மக்களும் விரும்பவில்லை என்பது, இதற்கு முன்பு வெளியான பல கருத்து கணிப்புகள் உறுதி படுத்தியது.

இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டு எடப்பாடி வெளியேற, நாங்களே உங்களை எப்படி கழட்டி விடுவது என நினைத்து கொண்டிருந்தோம், இப்ப நீங்களே வெளியேறுவது மிக மகிழ்ச்சி என்கிற நிலைக்கு வந்தது பாஜக தலைமை, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய எடப்பாடி அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்போம் என கொக்கரித்து கொண்டிருக்க, சத்தமே இல்லாமல் பாஜக தலைமையில் வலுவான கூட்டணியை அமைக்கும் வேலைகளை கட்சிதமாக நகர்த்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளார் அண்ணாமலை.

குறிப்பாக ops மற்றும் TTV தினகரன் இருவரும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது தென் மாவட்டங்களில் திமுக மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு இடையிலான நேரடி போட்டியாக தேர்தல் களம் மாறியுள்ளது, அதே போன்று பாமக பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதும் வடமாவட்டத்திலும் நடைபெற்று கொண்டிருக்கும் தேர்தலில் பாஜக கூட்டணி அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு திமுகவுடான நேரடி போட்டியில் இறங்கியுள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதிலும் சரி, வேட்பாளர்கள் தேர்விலும் சரி, ஒவ்வொரு நகர்வுகளும், மிக சாதுர்யமாக நகர்த்தி கடைசி நேரத்தில் என்ன நடக்கிறது என கணிக்கவே முடியாதபடி சுமார் 60 வருடங்களாக தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் திராவிட காட்சிகளை திக்குமுக்காட செய்துவிட்டார் அண்ணாமலை, அந்த வகையில் சரத்குமார் தன்னுடை கட்சியை பாஜகவுடன் இணைத்தது, பாமக கடைசி நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது என வலுவான கட்டமைப்போடு அண்ணாமலை தலைமையிலான பாஜக இந்த தேர்தலில் களம் காண்கிறது.

இந்நிலையில் பாஜக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில், அண்ணாமலை, தமிழிசை, ராதிகா சரத்குமார், எல்.முருகன், நயினார் நாகேந்திரன், பொன் ராதா கிருஷ்னன் என இப்படி ஒவ்வொருவரும் மக்கள் மத்தியில் மிக பிரபலமாக அறியப்பட்ட ஸ்டார் வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில், மறுபக்கம் அதிமுகவில் மூத்த தலைவர்கள் யாரும் போட்டியிட முன் வராததால் நண்டு சிண்டுகளுக்கெல்லாம் சீட் கொடுத்து களம் இறக்கியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

அந்த வகையில் வலுவான கூட்டணி, வலுவான வேட்பாளர்களுடன் தேர்தலை சந்தித்து வரும் பாஜக, திமுக கூட்டணிக்கு நேரடி சவலாக விளங்கி வருவதை பார்க்க முடிகிறது, இந்நிலையில் தற்போதைய களம் நிலவரம் படி அதிமுக பத்துக்கு மேற்பட்ட இடங்களில் டெபாசிட்டை இழக்கும் என்றும், மேலும் அதிமுகவிடம் இருந்து சுமார் 15 சதவிகித வாக்கு வங்கி இந்த முறை பாஜகவுக்கு அப்படியே மாறும் என்கிறது தேர்தல் கள நிலவரம்.