சென்னையில் போதை பொருள் குடோன் கண்டுபிடிப்பு… ராகி மாவில் கடத்தல்… ஜாபர் சாதிக் கூட்டாளி சுற்றி வளைப்பு…

0
Follow on Google News

இந்தியாவில் இருந்து உலகில் பல இடங்களுக்கு போதை பொருள் கடத்தல் நடைபெற்று வருவதாக இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் படி நடத்திய தேடுதல் வேட்டையில், டெல்லியில் தேங்காய் பவுடரில் வைத்து போதை பொருள் கடத்துவது தெரியவந்தது. மேலும் இது போன்று உணவு பொருட்கள் மூலம் உலகில் பல நாடுகளுக்கு போதை பொருள் கடத்தி வந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக டெல்லியில் செயல்பட்டு வந்த போதை பொருள் குடனில் வைத்து தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்தனர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், இந்த போதை பொருள் கடத்தலில் மூளையாகச் செயல்பட்டது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், அரசியல் கட்சி பிரமுகருமான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமைறைவானான். அவனை கடந்த 9 ஆம் தேதி அன்று ஜெய்ப்பூரில் உள்ள ஓட்டலில் வைத்து கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள், 7 நாள் காவலில் எடுத்து டெல்லியில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போதை பொருள் கடத்தலில் தொடர்புடைய ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் சலீம் மற்றும் மைதீன் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை வலைவீசி தேடும் காவல்துறையினர்.

அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அணைத்து விமான நிலையங்களிலும் மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதர்கள் இருவருடனும் யார் யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வரும் போதை பொருள் தடுப்பு பிரிவினர்.

தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் சகோதரர்களின் செல்போன் எண்களைக் கொண்டு அவர்கள் யாரையெல்லாம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்கள் என்பதையும் சேகரிக்க தொடங்கியுள்ளது NCB.இந்நிலையில் தற்பொழுது கைது செய்யப்பட்டு காவலில் எடுக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜாபர் சாதிக்யிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய தொடர் விசாரணையில். ஜாபர் சாதிக் கூட்டாளி சதா என்பவரை சென்னையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சதாவை கைது செய்த காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து நடத்திய விசாரணையில், போதைப்பொருள் கடத்தலுக்காக சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் குடோன் பயன்படுத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருச்சியைச் சேர்ந்த சதா திருச்சி மற்றும் சென்னையில் ராகி மாவில் போதைப் பொருளை கலப்படம் செய்து கடத்தலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனிற்கு ஜாபர் சாதிக்கை அழைத்து சென்று மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியாவிற்கு போதைப்பொருளை ஜாபர் சாதிக் கடத்தி இருந்தது விசாரணையில் ஏற்கனவே தெரியவந்தது.

தற்போது, ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கும் ஜாபர் சாதிக் போதைப்பொருளை கடத்தியதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை மையமாக வைத்து அதிகாரிகள் ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் அடுத்தடுத்து ஜாபர் சாதிக் யிடம் தொடர்பில் இருக்கின்றவர் சிக்குவார்கள் என எதிர்ப்பார்க்க படுகிறது.