ஒரு தொகுதி கூட காங்கிரஸ் வெற்றி பெறாது… மொத்தமாக தட்டி தூக்கும் பாஜக… வெளியான கருத்து கணிப்பு..

0
Follow on Google News

2024 மக்களவை பொதுத்தேர்தல் ஏப்ரல் – மே மாதத்தில் நடைபெறவுள்ளது. எந்த நேரத்திலும் பொதுத்தேர்தலுக்கான அதிகாரபூர்வ தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்கள் தொடர்பான அறிவிப்பு தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையில் நடக்கும் இந்த போட்டியில் வெல்ல போவது யார் என்கிற விவாதம் அனல் பறந்து வருகிறது.

மத்தியில் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறத் தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ள பாஜக, தனது வியூகத்துடன் தொடர்ந்து விறுவிறுப்புடன் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியும் தனது வியூகத்தை பின்பற்றி மக்களிடம் தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அரசு காற்பந்தாகிவிடும் என்பதால், இறுதிக்கட்ட அரசுத்திட்ட தொடக்கப்பணிகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகிய பணிகளில் பிரதமர் மோடி மற்றும் பிற மத்திய அமைச்சர்கள் விறுவிறுப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

பல மாநிலங்களுக்கு அடுத்தடுத்து சுற்றுப்பயணம் என பிரதமர் நரேந்திர மோடி சென்று வருகிறார். இந்த நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் யார் என்பது குறித்த கருத்து கணிப்புகளை அவ்வப்போது ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஏபிபி – சி வோட்டர் கருத்துக்கணிப்பு குறித்த முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக தான் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் தேர்தல் முடிவுகளை அறிய மக்கள் எப்போதும் ஆர்வமாக உள்ளனர். காரணம், மூன்றாவது முறையாக பிரதமராக வர விரும்பும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் அது. கடந்த இரண்டு முறையும் அந்த மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் 26 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ABP-C Voter Opinion Poll மூன்றாவது முறையாக மோடி மீது குஜராத் மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளதாக கூறியுள்ளது.

அதன்படி, குஜராத்தில் பாஜக 63 சதவீத வாக்குகளைப் பெற்று, 26 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. சட்டசபை தேர்தலில் குழப்பம் ஏற்பட்டாலும், நாடாளுமன்ற தேர்தல் வரும்போது ​​பாஜகவிற்கு முழுமையாக ஆதரவளிக்கும் மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. அந்த மாநிலத்தில் இருபத்தைந்து மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 25 தொகுதிகளிலும் பாஜக அமோக வெற்றி பெறும் என்று ஏபிபி-சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

இங்குள்ள காங்கிரஸ் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள ஒற்றுமையின்மையால் அக்கட்சியின் வாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படும் என தெரிகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் நான்கு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இது காங்கிரஸ் ஆளும் மாநிலம். இருப்பினும், ABP-C வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பில், 4 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி என்று தெரியவந்துள்ளது.

குஜராத், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும்பான்மையான தொகுதிகள் கிடைக்கும் என்றும் இந்த மாநிலங்களிலேயே அந்த கட்சிக்கு ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகள் கிடைத்துவிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஏபிபி – சி வோட்டர் கருத்துக்கணிப்பு குறித்த முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக தான் வெற்றி பெறும் என்றும், இந்த மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.