விஜய்க்கு இந்த அவமானம் தேவையா.? நடிகை கஸ்தூரியிடம் மூக்குடை பட்ட விஜய்..

0
Follow on Google News

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களாகவே அவருடைய நடவடிக்கைகள் அணைத்து, விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் மதுரையில் மிக பிரமாண்டமாக மாநாடு போட்டு கட்சி தொடங்க இருக்கிறார், இல்லை இல்லை திருச்சியில் தொடங்க இருக்கிறார் ஓவர் பில்டப் பலரும் கொடுத்த வந்த நிலையில் ஒரு A4 பேப்பரில் தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்து தன்னுடைய அரசியல் வருகையை உறுதி செய்தார்.

விஜய் புதியதாக கட்சி தொடங்கியுள்ளார், அவர் கொள்கை என்ன.? அவருடைய அரசியல் சித்தாந்தம் என்ன என மக்கள் மத்தியில் எழுந்த கேள்விகளுக்கு பதில் கொடுக்காமல், படப்பிடிப்பில் பிசியானார், மேலும் மத்திய மாநில அரசுகள் கொண்டு வரும் திட்டத்திற்கு எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல், சும்மா இருந்த இருந்த ரசிகர்களை கட்சி ஆரம்பிக்கிறேன் என A4 பேப்பரில் கட்சியை ஆரம்பித்து தூண்டிவிட்டுவிட்டு கம்முனு சும்மா ஜம்முனு சினிமா படப்பிடிப்பில் பிசியாகிவிட்டார்.

இந்நிலையில் தற்பொழுது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் போதை பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக், ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகியாக இருந்துள்ளார், நடிகர் விஜய் சார்ந்த சினிமா துறையில் விஜய் இருந்துள்ளார். ஆனால் நாட்டையே சீரழிக்கும் போதை பொருள் மாஃபியா கும்பல் தலைவன் ஜாபர் சாதிக் குறித்து இது வரை விஜய் வாய் திறக்கவில்லை.

இதற்கு காரணம், அவர் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருப்பதால் நம்ம எதாவது கருத்து சொல்ல, பின் நம்ம படம் வெளியாகும் போது சிக்கல் வர, அப்புறம் கை கட்டி அம்மா நீங்க தான் இந்த படம் வெளியாக உதவி செய்யவேண்டும் என தலைவா படத்தின் போது ஜெயலலிதாவிடம் விஜய் கெஞ்சியதெல்லாம் கண் முன்னே வந்து போகும்ல, அதான் விஜய் ஜாபர் சாதிக் பற்றி வாய் திறக்கவில்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

இப்படி மத்திய அரசு குறித்து விசாரணை செய்தால் வருமான வரித்துறை சோதனை வரும், ஏற்கனவே நீட் தேர்வு, ஜிஸ்டிக்கு எதிராக பேசி, நெய்வேலியில் இருந்த விஜயை தட்டி தூக்கி இனோவோ காரில் சென்னைக்கு அழைத்து வந்தது அப்ப விஜய்க்கு நினைவுக்கு வரும்ல, அதனால தான் மத்திய அரசுக்கு எதிராகவும் விஜய் வாய் திறப்பது இல்லை என கூறப்படுகிது, அந்த வகையில் மாநில அரசையும் எதிர்க்க துணிவு இல்லாமல், மத்திய அரசையும் எதிர்க்க துணிவு இல்லாமல் சமீபத்தில் குடியுரிமை சட்டடம் குறித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார் விஜய்.

அதில் சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல என்று தெரிவித்திருந்த விஜய், தமிழ்நாட்டில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

விஜய்யின் இந்த அறிக்கைக்கு பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி, அன்பிற்குரிய தளபதி விஜய் தன் அரசியல் ஆலோசகர்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார். CAA என்பது இஸ்லாமிய அண்டை நாட்டு மதவாதத்திலிருந்து தப்பி வந்தவர்களுக்கு புகலிடம் தரும் மனிதநேய சட்டம் என்று தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, சரியான புரிதலில்லாமல் அவசரப்பட்டு அறிக்கை விடுவது சரியல்ல என விஜய்யை கண்டித்த கஸ்தூரி

மேலும் சொல்ல போனால், இது போன்று ஒரு வழிவகை ஏற்படுத்த முடியுமா என்ற கோணத்தில் அல்லவா நாம் போராட வேண்டும் என்றும் இங்குள்ள இஸ்லாமியர் வெளியேற்றப்படுவார்கள் என்ற திட்டமிட்ட பொய்யை பரப்பும் விஷமிகளை அல்லவா நாம் கண்டித்திருக்க வேண்டும் என்று நடிகர் விஜய்க்கு CAA குறித்து நடிகை கஸ்தூரி பாடம் எடுக்கும் வகையில் விளக்கம் கொடுத்து இருந்தது விஜய்யை டோட்டல் டேமேஜ் செய்வது போன்று அமைத்துள்ளது, அந்த வகையில் விஜய் வழக்கம் போல் எதற்கும் கருத்து தெரிவிக்காமல் இருப்பதே அவருக்கு நல்லது, அல்லது எதுவுமே தெரியாமல் யாராவது எழுதி கொடுத்ததை கையெழுத்திட்டு அறிக்கை விடுகிறேன் என வெளியிட்டால், இது போன்ற தொடர் அவமானத்தை சந்திக்க நேரிடும் எனபதால், இந்த அசிங்கம் விஜய் உங்களுக்கு தேவை தானா.? என பலரும் விஜய்யை கிண்டல் செய்து வருவதை பார்க்க முடிகிறது.