மயானப் பணியாளர்களும் இனி முன்களப் பணியாளர்கள்தான்… அரசாணை வெளியீடு!

0
Follow on Google News

தமிழகத்தில் கொரோனா காலத்தில் மயானப் பணிகளில் ஈடுபட்டவர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை மரணங்களின் போது மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கொரோனா சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களைக் கொரோனா முன்களப் பணியாளர்களாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இதையடுத்து இப்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்ட மயானப் பணியாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் கொரோனா தடுப்புப் பணிகளின் போது இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.