மீண்டும் வில்லனாகும் அஜித்… மங்காத்தா பாணியில் ஒரு படம்!

0
Follow on Google News

நடிகர் அஜித் அடுத்து நடிக்கும் படத்தில் அவரின் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என சொல்லப்படுகிறது.அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தில் அஜித் ஒரு போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

ஹெச் வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஹூமா குரேஷி, யோகிபாபு, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச் வினோத்தே இயக்க, வலிமை தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிக்கவும் உள்ளார்.

இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தைப் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மங்காத்தாவுக்குப் பிறகு அஜித் முழுக்க முழுக்க எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.