உலகக்கோப்பை தொடர்நாயகன் வார்னர்… அவமானத்துகுப் பின் எழுந்த பாகுபலி!

0
Follow on Google News

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கடைசி சில போட்டிகளில் டேவிட் வார்னர் அவமரியாதையாக சன் ரைசர்ஸ் ஐதரபாத் அணியால் நடத்தப்பட்டார்.ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தியவர். அவர் தலைமையில்தான் அந்த அணி கோப்பையை வென்றது. ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக வார்னரை மிகவும் மோசமாக நடத்தியது அணி நிர்வாகம்.

அவரின் கேப்டன் பதவியைக் கடந்த ஆண்டு பிடுங்கிய நிலையில் இந்த ஆண்டு இறுதியில் சில போட்டிகளில் அவரை ஆடும் லெவனில் இருந்து தூக்கியது. இன்னும் ஒரு படி மேலே சென்று கடைசி போட்டிகளில் அவரை மைதானத்துக்குக் கூட அழைத்து வரவில்லை. மைதானத்தில் அவர் கண்கலங்கும் புகைப்படம் வெளியாகி அவரின் ரசிகர்களிடம் இருந்து விமர்சனம் பெற்றது.

இதனால் மனதளவிலும் ஆட்டத்திறன் அளவிலும் இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்புவரை அவர் மிகவும் மோசமான நிலையில் இருந்தார். இதனால் அவரை ஆஸி அணி தொடரில் பயன்படுத்துமா என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் அவரை நம்பி இந்த தொடரில் அவருக்கு தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பளித்தனர் கேப்டன் பின்ச்சும் பயிற்சியாளர் லாங்கரும். ஆஸி முன்னாள் வீரர்களும் அவரை உத்வேகப்படுத்தும் விதமாக பேசி வந்தனர்.

தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பினாலும் பின்னர் எழுந்த வார்னர் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். தொடர் முடிவில் 7 இன்னிங்ஸில் 289 ரன்கள் சேர்த்து தொடர்நாயகனாக தேர்வு செய்யப்படுள்ளார். இது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.