தண்ணீர் சூழ மிதக்கும் விஜய் பட செட்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

0
Follow on Google News

விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்துக்கு மிகப்பெரிய ஷாப்பிங் மால் செட் ஒன்று சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் திரைப்படம் தந்த வெற்றியை அடுத்து உத்வேகத்தோடு இந்த படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். இந்த படத்தில் விஜய்யோடு பூஜா ஹெக்டே, யோகி பாபு, ரெட்டின்ஸ் கின்ஸே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

முதலில் ஜார்ஜியாவில் நடந்த படப்பிடிப்பை அடுத்து சென்னையில் மிகப்பெரிய ஷாப்பிங் மால் செட் ஒன்று அமைக்கப்பட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தார் நெல்சன். இந்நிலையில் சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையில் நகரம் முழுவதும் வெள்ள நீர் வடியாமல் நகரமே வெள்ளக்காடாக மாறியது.

இந்நிலையில் சென்னையை அடுத்து பூந்தமல்லியில் அமைக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்தின் ஷாப்பிங் மால் செட்டும் நீரில் மூழ்கியுள்ளது. இது சம்மந்தமான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. ஆனால் வெள்ள நீரால் செட்டுக்கு பாதிப்பு இல்லையென்றும், தண்ணீரை வெளியேற்றிய பின் வழக்கம்போல ஷூட்டிங் நடக்கும் எனவும் சொல்லப்படுகிறது.