டாஸ் வென்ற கோலி பேட்டிங் செய்ய முடிவு!

0

இந்திய அணியின் கேப்டன் கோலி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார்.
நியுசிலாந்து அணிக்கெதிரான டி 20 தொடருக்குப் பின் நடந்த கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்து ட்ரா ஆனது. இந்நிலையில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் கோலி அணிக்குள் வந்து தலைமையேற்கிறார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இருந்து இஷாந்த் ஷர்மா, ரஹானே மற்றும் ஜடேஜா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதே போல நியுசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் விலகியுள்ளார். இந்நிலையில் மைதானத்தில் மோசமான அவுட் பீல்ட் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இன்னும் டாஸ் கூட போடவில்லை. தற்போதைய நிலவரப்படி 11.30 மணிக்கு டாஸ் போடப்படும் என்றும் 12 மணிக்கு போட்டி தொடங்கும் எனவும் சொல்லப்பட்ட நிலையில் இபோது டாஸ் போடப்பட்டுள்ளது.
டாஸை வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார். இந்திய அணியில் கோலியோடு சிராஜ் மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகியோர் இணைந்துள்ளனர்