முதல் முதலாக ரஞ்சித் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்!

0
Follow on Google News

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை வெற்றி இப்போது அவரின் சந்தை மதிப்பை அதிகமாக்கியுள்ளது. இந்நிலையில் அவருடன் இணைந்து பணியாற்ற முன்னணிக் கதாநாயகர்கள் ஆர்வமாக உள்ளனர். அந்தவகையில் பா ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக விக்ரம் நடிக்கிறார்.

இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்கு ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவில்லை என்றும் அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.