அதிமுகவில் உட்கட்சித் தேர்தல்… ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் பதவிகளுக்கு வேட்புமனு!

0
Follow on Google News

அதிமுகவில் உட்கட்சித் தேர்தல் பல பதவிகளுக்கு வரும் டிசம்பர் 7 ஆம் தேதி நடக்க உள்ளது. அதிமுகவில் இப்போது அதிகாரமிக்க பதவிகளாக இருப்பது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிதான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவி காலியாகவே உள்ளது.

இந்நிலையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுகான தேர்தல் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று காலை 10 மணி முதல் நடக்க உள்ளது. இதுமட்டுமில்லாமல் கட்சியின் பல்வேறு பொறுப்பாளர்களுக்கான தேர்தலும் நடக்க உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.