மும்பை டெஸ்ட்டில் நீக்கப்பட போவது இவர்தான்… தப்பித்த ரஹானே!

0

மும்பையில் நாளை நடக்க உள்ள டெஸ்ட் போட்டியில் கோலி அணியில் இணைய உள்ளார். இதனால் அவருக்குப் பதில் வெளியே செல்லப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நியுசிலாந்து அணிக்கெதிரான டி 20 தொடருக்குப் பின் நடந்த கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்து ட்ரா ஆனது.

இந்நிலையில் நாளை நடக்க உள்ள மும்பை டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் கோலி வருகிறார். அவரின் வருகையால் யார் நீக்கப்பட போவது என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே மோசமான பார்மில் இருக்கும் ரஹானேதான் நீக்கப்படுவார் என சொல்லப்படுகிறது. கேப்டனாக சிறப்பாக செயல்பட்டாலும் ரஹானே மோசமான ஆட்டத்திறனோடு இருப்பதால் அவரின் இடம் இனிமேல் அணியில் கேள்விக்குறியாகவே இருக்கும்.

ஆனால் இப்போது தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வாலை நீக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ரஹானேவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.