யோகி பாபு படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா!

0
Follow on Google News

இளையராஜா யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் பொம்மை நாயகி படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். யோகி பாபு தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். மேலும் அவர் கதையம்சம் கொண்ட படங்களில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். அப்படி அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன.

இப்போது அவர் இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்கும் பொம்மை நாயகி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஷான் என்பவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைக்க இசைஞானி இளையராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார். யோகி பாபு படத்துக்கு முதல் முதலாக இளையராஜா இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.