சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் டீசர் எப்போது? வெளியான தகவல்!

0
Follow on Google News

சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜெய் பீம் படத்துக்குப் பின்பு அவர் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸாக உள்ளது. சூர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள ஜெய் பீம் படத்தால் அவரின் அடுத்த படமான எதற்கும் துணிந்தவன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தில் பொள்ளாச்சி சம்பவம் பற்றிய காட்சிகள் இருப்பதாக சொல்லப்படுவதால் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால் பிப்ரவரி 3 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறது சன் பிக்சர்ஸ். இந்நிலையில் இந்த படத்தின் டீசர் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு அன்று வெளியாகும் என கோலிவுட் வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.