ஒரு அணியில் இருந்துகொண்ட மற்றொரு அணியோடு பேரம் பேசினாரா? கே எல் ராகுல் மீது குற்றச்சாட்டு!

0

பஞ்சாப் அணிக்காக ஆடிவரும் கே எல் ராகுலை அடுத்த ஆண்டு ஏலத்தில் கைப்பற்ற செம்ம போட்டி இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே எல் ராகுலுக்குதான் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பணமழை கொட்டப் போகிறது. ஏனென்றால் இப்போது அவர் விளையாடிக் கொண்டிருக்கும் பஞ்சாப் அணி அவரைத் தக்கவைக்க விரும்பியும் ஏலத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்து வெளியில் வந்துள்ளார்.

புதிதாக உருவாகும் லக்னோ அணிக்காக அவரை எடுத்து கேப்டனாக நியமிக்க வேண்டுமென அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் அவருக்காக 20 கோடி ரூபாய் வரை தர முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை ஐபிஎல் தொடரில் எந்தவொரு வீரரும் இவ்வளவு தொகைக்கு ஏலம் போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஐபிஎல் தொடருக்கான ஏலம் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பஞ்சாப் அணியில் இருந்துகொண்டே லக்னோ அணி நிர்வாகத்தோடு அவர் பேரத்தில் ஈடுபட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள பஞ்சாப் அணி நிர்வாகி நெஸ் வாடியா ‘ராகுல் அவ்வாறு செய்திருந்தால் அவர் பிசிசிஐ விதிகளின் படி தண்டிக்கப்பட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.