முன்பதிவில் மட்டுமே 100 கோடி வசூல்… சாதனைப் படைத்த மரைக்காயர்!

0
Follow on Google News

மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மரைக்காயர் திரைப்படம் முன்பதிவு மூலம் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். மலையாள சினிமாவின் வெற்றிக் கூட்டணியான மோகன்லால் & பிரியதர்ஷன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மரைக்கார் அரபிக் கடலிண்டே சிம்ஹம் திரைப்படம், தமிழில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்று மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தில் மோகன் லாலோடு அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு, அசோக் செல்வன், பைசால் , சித்திக், சுரேஷ் கிருஷ்ணா மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படம் ஒரு வருட தாமதத்துக்குப் பிறகு டிசம்பர் 2 ஆம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படம் முழுவதும் 4100 திரைகளில் வெளியாகிறது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகும் மரைக்காயர் திரைப்படம் முன்பதிவு மூலமாகவே 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக மலையாள பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் மலையாள சினிமாவாக மரைக்காயர் சாதனைப் படைத்துள்ளது.