ஐசிசி நடத்தும் அடுத்த 8 தொடர்கள்… இந்தியாவில் எத்தனை தெரியுமா?

0
Follow on Google News

ஐசிசி அடுத்து 2024 ஆம் ஆண்டு முதல் 2031 ஆம் ஆண்டு வரை நடத்த உள்ள தொடர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. முன்பெல்லாம் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை ஐசிசி நடத்தும். பின்னர் மினி உலகக்கோப்பை என சொல்லப்படும் சாம்பியன்ஸ் ட்ரோபியை அறிமுகப்படுத்தியது.

20 ஓவர் போட்டிகளின் அசுர வளர்ச்சியில் டி 20 உலகக்கோப்பையையும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தி, இப்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் நடத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக சமீபத்தில் டி 20 தொடர் முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட டி 20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு முதல் 2031 ஆம் ஆண்டு வரை ஐசிசி நடத்த உள்ள தொடர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 3 தொடர்களை இந்தியா அண்டை நாடுகளோடு இணைந்து நடத்துகிறது.
தொடர் விவரம்

• 2024 டி20 உலகக் கோப்பை: அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்
• 2025 சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான்
• 2026 டி20 உலகக் கோப்பை: இந்தியா, இலங்கை
• 2027 ஒரு நாள் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா

• 2028 டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
• 2029 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா
• 2030 டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து
• 2031 ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியா, பங்களாதேஷ்