தொடங்கியது கான்பூர் டெஸ்ட்… டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

0

இந்திய அணி கான்பூர் டெஸ்ட்டில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆட முடிவு செய்துள்ளது.
நியுசிலாந்து அணிக்கெதிரான டி 20 தொடருக்குப் பின் இன்று கான்பூரில் முதல் டெஸ்ட் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் கேப்டன் கோலி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் ஆடவில்லை. இளம் வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் சற்று முன்னர் டாஸ் நடைபெற்றது. அதில் கேப்டன் ரஹானே டாஸை வென்று பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளார். வெகு நாட்களுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் போட்டி நடப்பதால் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.