டி 20, ஒருநாள் மற்றும் டெஸ்ட்… அனைத்து போட்டிகளிலும் 50 வெற்றிகள் – கோலியின் புதிய சாதனை!

0

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி வெற்றி மேல் வெற்றிகளாகக் குவித்து வருகிறார். அவர் தலைமையில் உலகக்கோப்பை வெல்லவில்லை என்பது மட்டுமே இப்போது அவர் மேல் வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்றாக உள்ளது.

இந்நிலையில் மும்பை டெஸ்ட் போட்டியை வென்றதை அடுத்து மிக முக்கியமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 ஆகிய மூன்று வடிவங்களிலும் 50 வெற்றிகளை பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 97 டெஸ்ட் போட்டிகளில் 50 வெற்றிகளையும், 254 ஒருநாள் போட்டிகளில் 153 வெற்றிகளையும், 95 டி 20 போட்டிகளில் 59 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளார்.