மலர்ந்தது தாமரை…மறைகிறது சூரியன்… பெரியகருப்பன் அரசியலை அஸ்தவமனமாக்கிய திருமாறன் ஜி…

0
Follow on Google News

சிவங்கங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் இதுவரை 13 தடவைகள் தேர்தல் நடைபெற்றுள்ளன. அதில் திமுக மொத்தம் 7 முறை, அதிமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சை, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தலா ஒரு முறையாவது வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2006 முதல் 2026 வரை சுமார் 20 வருடங்களாக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் அமைச்சர் பெரிய கருப்பன் தற்பொழுது 5வது முறையாக மீண்டும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் திருப்பத்தூர் சட்டசபை தொகுதியில் கள நிலவரம் என்ன யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என எடுத்த சர்வே முடிவுகள் தற்பொழுது வெளியாகி உள்ளது, தொகுதி முழுவதுமே அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராக மக்கள் மனநிலையில் உள்ளதை பார்க்க முடிகிறது, தற்பொழுது பெரியகருப்பனுக்கு எதிராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருமாறன் ஜி போட்டியிடுவதால் நேரடியாக திருப்பத்தூர் தொகுதி பெரியகருப்பன் vs திருமாறன் ஜி என மாறி இருக்கிறது.

திருப்பத்தூர் மக்களின் பல வருடக் கனவு திட்டங்களில் ஒன்று காரைக்குடி–மதுரை ரெயில் சேவை தான். ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்ற மக்கள் பல முறை கோரிக்கை vaithalum 20 வருடமாக இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பெரியகருப்பன், ரயில் சேவை திட்டத்தை நிறைவேற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்கிற கோபம் திருப்பத்தூர் மக்களுக்கு உண்டு.

அதே நேரத்தில் சமிபதியில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் திருமாறன் ஜிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, கே சி திருமாறன் ஜி வெற்றி பெற்றால் திருப்பத்தூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த தொகுதிக்கான ரயில் திட்டம் உடன் செயல்படுத்தப்படும் என உறுதி அழைத்துள்ளார்.

இப்படி திருப்பத்தூர் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் கோரிக்கையாக வே கடந்த 20 வருடங்களாக இருந்து வரும் நிலையில், திருப்பத்தூர் தொகுதியில் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் அமைச்சர் பெரியகருப்பனை நீங்கள் ஆதரிக்கிறீர்களா .? எதிர்கிறீர்களா என் கேட்கப்பட்ட கேள்விக்கு, சுமார் 60 சதவிகிதம் எதிர்க்கிறோம் என்றும், 20 சதவிகிதம் பேர் ஆதரிக்கிறோம் என்றும், 9 சதவிகிதம் பேர் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை என்றும் , மீதம் 11 சதவிகிதம் பேர் கருத்து சொல்ல விருப்பம் இல்லை என தெரிவித்தனர்.

அதே போன்று மீண்டும் உங்கள் தொகுதியில் போட்டியிடும் அமைச்சார் பெரியகருப்பனுக்கு வாக்களிப்பீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு 68 சதவிகிதம் பேர் மாட்டோம் என்றும், 28 சதவிகிதம் பேர் ஆம் என்றும், 4 சதவிகிதம் பேர் கருத்து ஏதும் தெரிவிக்க வில்லை. மேலும் பெரியகருப்பனுக்கு எதிராக தாமரை சின்னத்தில் போட்டியிடும் திருமாறன் ஜிக்கு வாக்களிப்பீர்களா, அமைச்சர் பெரியகருப்பனுக்கு வாக்களிப்பீர்களா அல்லது யாருக்கு உங்கள் வாக்கு என்கிற கேள்விக்கு.

42 சதவிகிதம் பேர் திருமாறன் ஜிக்கு தாமரை சின்னத்தில் வாக்களிப்போம் என்றும் 35 சதவிகிதம் பேர் அமைச்சர் பெரிய கருப்பனுக்கு வாக்களிப்போம் என்றும், 14 சதவிகிதம் பேர் தவெக வுக்கு வாக்களிப்போம் என்றும், 5 சதவிகிதம் நாம் தமிழர் கட்சிக்கு என்றும் 3 சதவிகிதம் பேர் நோட்டாவுக்கு வாக்களிப்போம் என தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் படி சூர்யன் மறைந்து தாமரை மலர அதிக வாய்ப்புள்ளது என்கிறது தேர்தல் கள நிலவரம், அந்த வகையில் அமைச்சர் பெரியகருப்பனை வீழ்த்தி திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினராக தாமரை சின்னத்தில் போட்டியிடும் தென் இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் ஜி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளதை பார்க்க முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here