வாட்ச் விவகாரம் … அண்ணாமலை பயந்து விட்டாரா.? விடாமல் சீண்டும் திமுகவினர்… அண்ணாமலை திட்டம் இது தான்..

0
Follow on Google News

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் ஒரு வாரங்கள் எட்டிய நிலையில் இன்னும் அதற்கான பரபரப்பு குறையாமல் சென்று கொண்டிருக்கிறது. அண்ணாமலை ரஃபேல் வாட்ச் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்ப, அதற்கு அந்த வாட்ச் குறித்த விளக்கத்தை தெரிவித்தார் அண்ணாமலை. தொடர்ந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் குடும்பத்திற்கும், திமுக அமைச்சர்களுக்கும் பல்வேறு குடைச்சல் கொடுத்து வருகின்றவர் அண்ணாமலை.

அந்த வகையில் அண்ணாமலை ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்க மாட்டாரா.? என்று காத்திருந்த திமுக தரப்பு அண்ணாமலையின் வாட்ச் விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்தது. அண்ணாமலையின் வாட்ச் குறித்து பல சந்தேக கேள்விகளை எழுப்பிய திமுகவினர். குறிப்பாக அண்ணாமலை வாட்ச் வாங்கிய ரசீதை வெளியிட வேண்டும் என்று திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி காலக்கெடு விதித்தார்.

ஆனால் அண்ணாமலை தான் வாட்ச் வாங்கிய ரசீதை ஏப்ரல் மாதம் வெளியிடுவதாகவும், அப்படி அந்த ரசீதை வெளியிடும் பொழுது திமுக தலைவர் மு க ஸ்டாலின் குடும்பத்தினர்க்கு எவ்வளவு சொத்துக்கள் உள்ளது, மற்றும் திமுக அமைச்சர்கள் அவர்களுடைய பினாமிகள் சொத்துக்கள் எவ்வளவு என்கின்ற பட்டியலும் வெளியிடப்படும்.

இதற்காக தனியாக ஒரு இணையதள பக்கம் தொடங்கப்பட்டு அதில் அமைச்சர்கள் மற்றும் முதல்வர் குடும்பத்தினர் வாங்கிய சொத்துக்கள் பொதுமக்கள் அனைவரும் பார்வைக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்த அண்ணாமலை, அதுவரை இந்த வாட்ச் விவகாரம் டீக்கடையில் கூட சாமானிய மக்களும் பேசும் அளவுக்கு மாற வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அண்ணாமலையின் திட்டம் என்பது இந்த வாட்ச் விவகாரம் மிகப்பெரிய அளவில் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டு, பின்பு மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழும்போது, வாட்ச் ரசீது உட்பட திமுக அமைச்சர்கள் மற்றும் முதல்வர் குடுப்பதினர் சொத்து பட்டியலை வெளியிட்டால், அது மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

கடந்த 2011 மற்றும் 2014 தேர்தலின் போது 2ஜி ஸ்பெக்ட்டர் ஊழல் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி திமுகவுக்கு மிகப்பெரிய தோல்வியை பெற்று தந்தது, அதேபோன்று திமுக அமைச்சர்கள் மற்றும் முதல்வர் குடும்பத்தினரின் சொத்து பட்டியலை வெளியிடும் பொழுது, அது திமுகவுக்கு எதிராக மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை உண்டாக்கி , அதை பாஜக பக்கம் திரும்பும் என்பதுதான் அண்ணாமலையின் திட்டமாக உள்ளது.

அப்படி மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி உருவாக வேண்டும் என்றால், தன்னுடைய வாட்ச் விவகாரம் தமிழக மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்பதுதான் அண்ணாமலையின் திட்டமும் என்கின்றனர் பாஜகவினர். ஆனால் இந்த அண்ணாமலையின் திட்டம் என்னவென்று தெரியாமல் தொடர்ந்து வாட்ச் விவரம் குறித்து அண்ணாமலை பேசுவதை நிறுத்திவிட்டாலும் கூட திமுக உடன் பிறப்புகள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டி அண்ணாமலையை சீண்டி வருகின்றனர்.

பயந்துட்டியா மல..? தம்பி மல பில்லு இன்னும் வரல ,,, என்கின்ற வாசகத்துடனும் தமிழக முழுவதும் திமுகவினர் போஸ்டர் ஒட்டி அண்ணாமலையை சீண்டுவதாக நினைத்து அண்ணாமலை நினைத்தது போல மக்கள் மத்தியில் இந்த வாட்ச் விவகாரத்தை கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள் திமுகவினர். இந்த நிலையில் அண்ணாமலை எதிர்பார்த்தது போல் இந்த வாட்ச் விவரம் டீக்கடை முதல் பேசப்படும் சூழல் சூழலை திமுகவினரை உருவாக்கி வருவது அண்ணாமலைக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை சுற்றி வளைந்த பாஜகவினர்.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் சங்கிகள் அட்டகாசம்..