முக்கிய கட்சியில் இணையும் காயத்ரி ரகுராம்… மாநில அளவில் முக்கிய பொறுப்பு…எந்த கட்சி தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை காயத்ரி ரகுராம் எட்டு வருடங்களுக்கு மேலாக பாஜகவில் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து கட்சிக்குள் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி வந்தார். இதனை தொடர்ந்து பாஜகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.

இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் திமுகவில் சீட் கிடைக்கவில்லை என்பதற்காக காலையில் பாஜகவில் இருந்து மதியம் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றவர் மதுரை டாக்டர் சரவணன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் பாஜகவினர் இடையே நடைபெற்ற மோதல் காரணமாக நிதி அமைச்சர் வாகனம் இது செருப்பு வீசி சம்பவம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் திமுக இடையிலான அரசியல் பரபரப்பு ஏற்படுத்தி இருந்த நிலையில் மதியம் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை கடுமையாக பேசி சவால் விட்ட மதுரை சரவணன், அன்று இரவு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து பாஜகவில் இருந்து விலகுவதாகவும் தன்னை திமுகவில் இணைத்துக் கொள்வதாகவும் அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து திமுகவில் முக்கிய பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த மதுரை சரவணனுக்கு மதுரை மாவட்டத்தில் திமுகவைச் சேர்ந்த மூன்று மாவட்ட செயலாளர்களும் சரவணன் மீண்டும் திமுகவில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் திமுக தலைமையும் சரவணனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

இந்நிலையில் சரவணன் திமுகவில் இணைவதற்கும் முதல்வர் மு க ஸ்டாலினை சந்திக்கவும் பலமுறை முயற்சி செய்தும் அலட்சியப்படுத்தி வந்துள்ளது திமுக தலைமை. இந்நிலையில் மீண்டும் பாஜகவில் இணைவதற்கு முயற்சி செய்த சரவணன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் மீண்டும் சரவணன் கட்சியில் சேர்த்தால் கட்சிக்கும் அவ பெயர் என்பதால் மீண்டும் சரவணன் கட்சியில் இணைப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை அண்ணாமலை.

இந்த நிலையில் திமுக- பாஜக என இரண்டு கட்சிகளுமே புறக்கணித்து விட்ட நிலையில், வேற எந்த கட்சிக்கு போவது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார் பல கட்சிகள் தாவி வந்த சர்வ கட்சி சரவணன். அரசியலில் மோகம் கொண்ட சரவணன், திமுக மற்றும் பாஜக தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை என்றால் புதிய கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, இது குறித்து அவருடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

திமுகவில் சீட் கிடைக்காமல் பாஜகவில் சரவணன் இணைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். ஏற்கனவே சரவணன் சில சினிமா படங்களின் நடித்த போது சினிமா துறையில் இருக்கும் காயத்ரி அவர்களுடன் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே காயத்ரி ரகுராம் மூலம் பாஜகவில் இணைந்தார் சரவணன்.

பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் மீண்டும் பாஜகவில் இணைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று பாஜகவினர் தெரிவித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து சரவணன் தொடங்க இருக்கும் புதிய கட்சியில் காயத்ரி ரகுராமுக்கு மாநில அளவில் முக்கிய பொறுப்பு வழங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், அதனால் சரவணன் தொடங்கும் புதிய கட்சியில் காயத்ரி ரகுராம் இணைந்து பயணிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது

தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட எடப்பாடி… அந்தர் பல்ட்டி அடிக்கும் பரிதாபம்.. கருணை காட்டுமா பாஜக.?