அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை சுற்றி வளைந்த பாஜகவினர்.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் சங்கிகள் அட்டகாசம்..

0
Follow on Google News

கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக அமைச்சர் கீதாஜீவன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக எச்சரித்தார், அதில் நான் தெற்கத்தி பொண்ணு, முதல்வர் மற்றும் அமைச்சர்களை பற்றி பொய் பேசுவதை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் அண்ணாமலை பேசும் மேடைக்கு நாங்கள் வருவோம்,

இத்துடன் அண்ணாமலை முடித்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் நாங்கள் எதிர்த்து நிற்போம், ஊருக்குள் வந்து பேச முடியாது என அண்ணாமலையை கடுமையாக எச்சரித்து இருந்தார் அமைச்சர் கீதா ஜீவன். திமுக அமைச்சரின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவின் துணைத் தலைவர் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா மிகக் கடுமையாக பதில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதில் அண்ணாமலை கட்சி நிகழ்ச்சி மேடையில் ஏறும்போது திமுகவினர் மேடை ஏறுவோம் என அமைச்சர் கீதா ஜீவன் பேசியிருக்கிறார், நீங்கள் வீட்டிலிருந்து வெளியே வரும்போது உங்களுக்கு கால் இருக்காது, பேசுவதற்கு நாக்கு இருக்காது,நாகரீக அரசியல் செய்ய வேண்டும். தெற்கத்திப் பெண்களுளுக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள் என்று அமைச்சர் கீதா ஜீவனுக்கு எதிர் எச்சரிக்கை விடுத்தார் சசிகலா புஷ்பா.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசியலில் கீதா ஜீவன் மற்றும் சசிகலா புஷ்பா இருவருக்குமான மோதல் உச்ச கட்டத்தை அடைந்தது. இந்நிலையில் சசிகலா புஷ்பா வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் அந்த வீட்டின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், அங்கே இருந்த பூ தொட்டிகள், நாற்காலிகளை அடித்து துவம்சம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பாஜக மற்றும் திமுகவுக்கு இடையிலான தூத்துக்குடி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சசிகலா புஷ்பா வீடு சேதப்படுத்தபட்டதை எதிர்த்து பதிலுக்கு, அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை முற்றுகை இடுவதற்காக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜகவினர் திரளாக திரண்டனர். அமைச்சர் வீட்டை நோக்கி புறப்பட்ட பாஜகவினரை செல்லும் வழியில் எட்டையாபுரம் ரோடு அருகே போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினர்.

இருந்தும் தடுப்புகளை தாண்டி பாஜகவினர் முன்னேறி சென்றனர், இதனைத் தொடர்ந்து அவர்களை பின் தொடர்ந்த அதிரடி படையினர் விரைந்து வந்து பாஜகவினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதே போன்று போல்பேட்டையில் உள்ள அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை சுற்றி வளைக்க மற்றொரு தரப்பு பாஜகவினர் முயன்ற போது போலீசார் தடுத்து அவர்களை கைது செய்தனர்.

இந்த நிலையில் தற்பொழுது தூத்துக்குடி அரசியலில் திமுக – பாஜக என்கின்ற ஒரு நிலை உருவாகி, கீதா ஜீவனுக்கும் சசிகலா புஷ்பாவுக்கும் எதிரான அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் ஆளுங்கட்சி அமைச்சர் வீட்டையே பாஜகவினர் சுற்றி வளைத்து முற்றுகையிடம் அளவுக்கு வளர்ந்து விட்டனர் என்கின்றது தூத்துக்குடி அரசியல் வட்டாரங்கள்.

மேலும் சமீபத்தில் தமிழக முதல்வர் தென்காசி சென்றபோது அங்கே ரயில் நிலையத்தில் ஒரு உடன்பிறப்பு தளபதி சங்கீகள் தொல்லை தாங்க முடியவில்லை என்று முதல்வரிடம் முறையிட்டார். அந்த வகையில் கீதா ஜீவன் – சசிகலா புஷ்பா இடையிலான மோதலில் அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினரின் செயல்களால், நாளுக்கு நாள் சங்கிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது என்று திமுக உடன் பிறப்புகள் வேதனை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது

பசும்பொன் தேவர் நினைவிடம் வரும் பிரதமர் மோடி… ஏற்பாடுகள் தீவிரம்… எப்போது தெரியுமா.?