புதுச்சேரி அரசியல் விவகாரம்.! ஸ்டாலின் எப்படி முதல்வராவர் என்று பார்ப்போம், டெல்லி காங்கிரஸில் இருந்து எச்சரிக்கை.!

0
Follow on Google News

புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர் ராஜினாமாவை தொடர்ந்து ஆளும்கட்சி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை குறைந்து, தற்போது காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் இரண்டு முறை தமிழகம் வந்த ராகுல்காந்தியை திமுக சார்பில் யாரும் நேரில் சென்று மரியாதை நிமித்தமாக கூட சந்திக்கவில்லை, வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 10 சீட் மட்டுமே ஒதுக்கமுடியும் என திமுக தரப்பில் இருந்து நேரடியாக டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு தெரிவித்ததை தொடர்ந்து கடும் அப்செட்டில் இருந்த ராகுல் காந்தி கடந்த சட்டசபை தேர்தலின் போன்று 40 சீட் வரை பெற்றுவிட வேண்டும் என காய் நகர்த்தி வந்தார்.

இதனை தொடர்ந்து தமிழக பயணத்தின் போது திமுக தலைவர்கள் சந்திப்பார்கள், அப்போது கூட்டணி தொகுதி பங்கீட்டு குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என எதிர்பார்த்து ஒரே மாதத்துக்குள் இரண்டு முறை தமிழகம் வந்த ராகுல்காந்தியை கண்டு கொள்ளவில்லை திமுக, இதனை தொடர்ந்து திமுக தயவு நமக்கு தேவை இல்லை, நமது தயவு தான் வரும் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு தேவை என தமிழக காங்கிரஸ் முக்கிய தலைவர்களிடம் தெரிவித்த ராகுல்காந்தி மூன்றாவது அணி அமைப்பதற்கான வேலையை தொடங்குகள் என தமிழகம் வந்த ராகுல் காந்தி தெரிவித்துவிட்டு டெல்லி சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக தரப்பில் இருந்து கமல்ஹாசன், மற்றும் பாமாவுடன் கூட்டணி குறித்து நடத்திய பேச்சுவார்த்தையில் இரண்டு கட்சியும் திமுகவில் இணைவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை, இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை தக்க வைக்க டெல்லி சென்று ராகுல்காந்தியை சந்திக்க சென்ற முக ஸ்டாலின் மருமகன் சபரிசனை சந்திக்க மறுத்துவிட்டார் ராகுல்காந்தி.

திமுக சார்பில் புதுசேரி முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரக்சன் முன்னிறுத்தப்பட்ட பின்பு தான், புதுசேரி அரசியலில் குழப்பம் ஏற்பட்டு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்தனர், மேலும் தமிழகத்தில் கூட்டணி தொடர்பான திமுகவின் நடவடிக்கைகள் என அனைத்தும் ராகுல்காந்தியை பெரும் சங்கடத்துக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது, அதனால் தான் சபரிசனை சந்திக்காமல் புறக்கணித்தார் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து புதுச்சேரியில் கடும் நெருக்கடியில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் சுழலில் இருந்த நேரத்தில், புதுசேரி வந்த ராகுல்காந்தி திமுக தலைவர்களை சந்தித்து காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்றுவது பற்றி ஆலோசனை நடத்துவர் என திமுக தரப்பில் இருந்து எதிர்பார்த்த நிலையில், ராகுல்காந்தி அப்படி ஒரு சந்திப்பை நடத்தாமல் டெல்லி திருப்பினார், இதனை தொடர்ந்து கடும் நெருக்கடியில் இருந்த புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சிக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் விதத்தில் கூட்டணிக்கட்சி திமுகவின் எம்.எல்.ஏ வெங்கடேசனும் ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திமுக எம்எல்ஏவான வெங்கடேசனும் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் தந்தவர், “தொகுதி மேம்பாட்டு நிதியே தராததால் தொகுதிக்கு பணியாற்ற இயலாத சூழலால் ராஜினாமா செய்கிறேன்” , மேலும் புதுச்சேரி அரசால் தாளவாடி மக்களுக்கு தட்டாஞ்சாவடி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை எனக்கு எந்தவித அழுத்தமும் கிடையாது தொகுதிக்கு எதுவும் செய்ய முடியாத சூழலில் எப்படி மக்களிடம் சென்று வாக்கு கேட்க முடியும் என கேள்வி எழுப்பினார் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை திமுக தலைமையிடம் கூறி விட்டேன் என்றார் தற்போது நான் திமுகவில் தான் உள்ளேன் எம்எல்ஏ பதவியை மட்டும் தான் ராஜினாமா செய்துள்ளேன் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து திமுக எம்எல்ஏ ராஜினாமா பின்னனியில் திமுக தலைமை இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுபதற்காகவே இதுபோன்று செய்வதாக தகவல் வெளியானது, இந்நிலையில் இந்த தகவல் ராகுல்காந்திக்கு சென்றுள்ளதை தொடர்ந்து, திமுக மூத்த எம்பி ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட டெல்லி காங்கிரஸ் தலைமை, எங்களுடன் கூட்டணியில் இருந்து கொண்டு புதுச்சேரியில் ஆட்சியை கவிழ்ப்பதற்கு காரணமாக இருந்துள்ளீர்கள், இதற்கான விளைவுகளை வரும் தமிழக சட்டசபை தேர்தலில் சந்திப்பீர்கள் என தெரிவித்தவர், உங்கள் தலைவர் ஸ்டாலின் எப்படி எங்கள் உதவி இல்லாமல் முதல்வராவர் என பார்ப்போம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்து ஆட்டம் கண்ட திமுக தலைமை, கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை நமது வழிக்கு கொண்டுவர நாம் எடுத்த முயற்சி நமக்கே எதிராக அமைத்துள்ளது என புலம்பி தவித்தவரக்ள், உடனே காங்கிரஸ் டெல்லி தலைமையை சமாதன படுத்தும் விதத்தில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஓன்று அவசரமாக வெளியிட்டுள்ளார் அதில், வெங்கடேசன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .