மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் முரசொலி பஞ்சமி நில விவகாரம்.! தேர்தலுக்கு முன்பு திமுக முகத்திரையை கிழிக்க திட்டம்.!

0
Follow on Google News

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசூரன் திரைப்படத்தை திரையில் பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின், அந்த படத்தில் வரும் பஞ்சமி நில விவகாரம் குறித்து கருத்து தெரிவித்ததற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திமுகவுக்கு சொந்தமான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என தெரிவித்தார், இதனை தொடர்ந்து மருத்துவர் ராமதாஸ் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இடையே முரசொலி அலுவலகம் குறித்து வார்த்தை போர் தொடங்கியது.

இதனை தொடர்ந்து தற்போது தமிழக பாஜக தலைவராக இருக்கும் எல்.முருகன் தேசிய பட்டியல் சமூக துணை ஆணையராக இருந்த போது, டெல்லியில் உள்ள பட்டியல் சமூக அனைய அலுவலகத்தில் நேரில் சென்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன்,முரசொலி அலுவலகம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இது தொடர்பாக பட்டியல் சமூக ஆணையம் விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தார்.

இந்நிலையில் விசாரணையை தொடங்கிய பட்டியல் சமூக ஆணையம் முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதி உட்பட சம்பந்தபட்ட அனைவரையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியது, இந்நிலையில் பட்டியல் சமூக ஆணையம் அனுப்பிய நோட்டீசை பெற்றுக்கொண்ட திமுக தரப்பினர், விசாரணையின் போது போதிய ஆவணத்தை சமர்பிப்போம் என வீர வசனம் பேசினார்.

இதனை தொடர்ந்து விசாரணையின் போது முரசொலி மூலபத்திரத்தை சமர்ப்பித்து தங்களை சமூக நீதி சாம்பியன் என திமுக நிரூபிக்கும் என தமிழகமே எதிர்பார்த்த நிலையில், முரசொலி அலுவலக நிர்வாக இயக்குனர் உதயநிதி ஆஜராகவில்லை, அவருக்கு பதிலாக திமுக அமைப்பு செயலாளரும், முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர்களின் ஒருவரான ஆர்.எஸ்.பாரதி தனது வழக்கறிகர் குழுவுடன் கையில் ஒரு சூட்கேசுடன் பட்டியல் சமூக ஆணையத்திடம் அஜனார்.

ஆனால் தமிழகமே எதிர்பார்த்த முரசொலி மூலபத்திரத்தை சமர்பிக்காமல் வெளியில் வந்த ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து உடன் கொண்டுவந்த சூட்கேஸை தூக்கி காண்பித்து இதன் உள்ளே அணைத்து ஆதாரமும் உள்ளது என தெரிவித்தவர், இறுதிவரை முரசொலி மூலபத்திரத்தை காண்பிக்கவே இல்லை, இந்நிலையில் இந்த விவகாரம் ஒரு வருடங்களுக்கு மேல் கடந்த நிலையில், முரசொலி அலுவகம் பஞ்சமி நில விவகாரத்தை கையில் எடுத்து வரும் தேர்தலுக்குள் முரசொலி அலுவலகம் குறித்த உண்மையை வெளியில் கொண்டுவர திமுகவுக்கு எதிராக ஒரு முக்கிய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்பது நிரூபித்துவிட்டால், மக்கள் மத்தியில் இதுவரை சமூகநீதி சாம்பியன் என தம்பட்டம் அடித்து வரும் திமுகவின் முகத்திரை கிழிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பட்டியல் சமூக மக்கள் மத்தியில் திமுகவுக்கு மிக பெரிய அவப்பெயரை ஏற்படும் என்பதால் மீண்டும் முரசொலி அலுவகம் பஞ்சமி நில விவகாரத்தை கையில் எடுக்க தொடங்கியுள்ளது முக்கிய அரசியல் கட்சி.