பொறுமை இழந்த முக ஸ்டாலின்…ஓரம் கட்டப்பட்ட உதயநிதி… கடும் அப்செட்டில் உதயநிதி எடுத்த முடிவு…

0
Follow on Google News

சமீபத்தில் நடந்த திமுக முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள வில்லை. திமுகவின் அடுத்த தலைவர் என கட்சி நிர்வாகிகளால் எதிர்பார்க்கப்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் மறைந்த கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாதது திமுகவில் மட்டுமில்லை, தமிழக அரசியலில் மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் கருணாநிதி பிறந்தநாள் விழாவுக்கு முன்பு அரசு தரப்பில் இருந்து உதயநிதி தொடர்பாக ஒரு அறிக்கை வெளியானது, அந்த அறிக்கையில், துணை முதல்வர் உதயநிதி கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர் அறிவுறுத்தி உள்ளார். இதனால் உதயநிதி கலந்து கொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன என அரசு தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகி இருந்தது.

பொதுவாகவே இதற்கு முன்பு அமைச்சர்கள், முதல்வர் என யார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், மருத்துவமனை தரப்பில் இருந்து தான் அறிக்கை வெளியாகும், ஆனால் உதயநிதி ஸ்டாலின், ஓய்வு எடுக்க கூடிய அளவுக்கு அவருக்கு கடுமையான காய்ச்சல், இருமல் இருந்திருந்தால் மருத்துவமனை சென்று அவருடைய உடல்நிலையை பரிசோதனை செய்து, மருத்துவமனையில் இருந்து அவருடைய உடல்நிலை குறித்து அறிக்கை வெளியாகி இருக்க வேண்டும்.

ஆனால், அப்படி துணை முதல்வர் உதயநிதி மருத்துவமனை சென்று உடல்நிலையை பரிசோதனை செய்ததாக எந்த செய்தியும் வெளிவர வில்லை, அப்படி இருக்கையில் உதயநிதி ஓய்வில் இருக்க இருப்பதாக அறிவித்துள்ளது பின்னணியில், முதல்வர் முக ஸ்டாலின் மீது ஏற்பட்ட கோபம் தான் என்றும், அப்படி முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையில் என்ன நடந்தது என அரசியல் வட்டாரத்தில் விசாரித்ததில் சில தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் மதுரையில் நடந்த பொதுக்குழுவில், உதயநிதி தனக்கு திமுகவில் பேரன்பாடிக்குள் பொறுப்பு வேண்டும், அப்போது தான் திமுகவில் முக்கிய முடிவு எடுக்கும் இடத்திற்குள் நான் வரமுடியும் என முதல்வர் முக ஸ்டாலினுக்கு தன்னுடைய தாயார் துர்கா அம்மா மூலம் அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் முதல்வர் சமீபத்தில் உதயநிதி நண்பர்களான ரத்தீஸ், விக்ரம் ஜூ ஜூ ஆகியோரால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை சுட்டி காட்டி கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம் என முதல்வர் தெரிவித்து விட்டதாக கூறப்டுகிறது.

தற்பொழுது துணை பொதுச் செயலாளர் அடுத்து பொருளாளர் அடுத்து செயல் தலைவர், அடுத்து தலைவர் என உதயநிதியின் அரசியல் பார்முலாவுக்கு முதல்வர் இடம் கொடுக்கவில்லை என்பதால் கடும் அப்செட்டான உதயநிதி ஸ்டாலின், இனி அடுத்து பொதுக்குழு கூட்டம் நடக்க சில வருடம் ஆகும், அதுவரை இளைஞரணி பொறுப்பு மட்டும் தான் என்கிற கோபம் உதயநிதிக்கு ஏற்பட்டு இருக்கிறது.

இதனை தொடர்ந்து தந்தை தனக்கு துணை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படவில்லை என்கிற கோபத்தில், உதயநிதி எடுத்த முடிவு தான் அரசு தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட செய்து, அதில் துணை முதல்வர் உதயநிதி கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

இதனால் உதயநிதி கலந்து கொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன என அரசு தரப்பில் இருந்து இந்த அறிக்கை வெளியானதில் பின்னணியில் தன்னை தந்தை சமாதானம் செய்ய வருவார் அப்போது தான் எதிர்பார்த்த துணை பொதுச் செயலாளர் பதவியை பெற்று விடலாம் என உதயநிதி திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் முதல்வர் முக ஸ்டாலின் தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதால் உதயநிதிக்கு அடுத்து உயர் பதவி ஏதும் கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.