கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு… முன்னிலையில் அதிமுக… 16 % வித்தியாசத்தில் திமுக தோல்வி…

0
Follow on Google News

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் நாங்கள் மொத்தம் 8,164 பேரிடம் நேரடியாக கருத்துக்கணிப்பு மேற்கொண்டோம். அந்த ஆய்வின் அடிப்படையில் பார்க்கும்போது, கலசப்பாக்கம் தொகுதியில் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட சுமார் 2,000 பெண் வாக்காளர்கள் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியாளர்களைப் பார்க்கும்போது,திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ சரவணன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். அவர் தற்போது போளூர் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். மேலும் முக்கியமாக சொல்ல வேண்டியது என்னவென்றால், அவர் இதற்கு முன்பு இரண்டு முறை கலசப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றவர். அதனால் இந்த தொகுதி அவருக்கு அரசியல் ரீதியாக நன்கு பரிச்சயமான பகுதியாக இருக்கிறது.

அதேபோல், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழுமலை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் கீதா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். ஆனால் கள ஆய்வில் தெளிவாக தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், இந்த தொகுதியில் நேரடியான போட்டி அதிமுக மற்றும் திமுகவுக்குள் மட்டுமே உள்ளது.

திமுக வேட்பாளர் சரவணன் தற்போது பதவி வகிக்கும் எம்எல்ஏ என்பதால் அது அவருக்கு ஒரு பிளஸ். ஆனால் அதே நேரத்தில், கடந்த 5 ஆண்டுகளில் அடிப்படை வசதிகளில் பெரிய முன்னேற்றம் இல்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடையே உள்ளது. இந்த தொகுதி சுமார் 99% கிராமங்கள் கொண்ட தொகுதி என்பதால் மக்கள் அடிப்படை கட்டமைப்புகளை மிகவும் முக்கியமாக பார்க்கிறார்கள்.

மறுபுறம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி இந்த தொகுதியில் முன்பு இரண்டு முறை வெற்றி பெற்றவர் என்பதால் மக்களிடம் நல்ல நெருக்கமும் பழக்கமும் இருப்பதாக ஆய்வில் தெரிய வருகிறது. நாங்கள் செய்த கருத்துக்கணிப்பின் அடிப்படையில்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக): 45% – 51%

சரவணன் (திமுக): 29% – 35%

ஏழுமலை (தமிழக வெற்றிக் கழகம்): 16% – 21%

கீதா (நாம் தமிழர்): 2% – 6%

இதில் முக்கியமாக பார்க்கும்போது, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பெறும் வாக்குகளில் பெரும்பாலானவை திமுக வாக்கு வங்கியிலிருந்து பிரியும் என்று ஆய்வில் தெரிய வருகிறது.மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவும் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு இந்த தொகுதியில் கூடுதல் பலமாக உள்ளது.

இதனால், இந்த அனைத்து தரவுகளையும் கள ஆய்வையும் வைத்து பார்க்கும்போது, கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என்பதே எங்கள் கருத்துக்கணிப்பு முடிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here