ஹெக்டருக்கு 3 லட்சம் செலவு செய்தால், 10 லட்சம் வரை நிகர லாபம் விளைச்சல் தரும் திட்டம்.! அண்ணாமலை IPS விளக்கம்.!

0
Follow on Google News

பாஜக துணை தலைவர் அண்ணாமலை IPS தனது சமூக வலைதள பக்கத்தில், பெரும் ஆதாயம் ஆன பெருங்காயம் – மோடிஜியின் மேக் இன் இந்தியா என்ற தலைப்பில் விவசாயம் குறித்து பதிவு செய்துள்ளார் அதில்,

  1. கடந்த ஆண்டு மட்டும் நாம் 1500 டன் அளவிலான பெருங்காயத்தை ஆப்கானிஸ்தான் , ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளிலிருந்து சுமார் 942 கோடி செலவில் பாரதம் இறக்குமதி செய்துள்ளது
  2. ஃபெருளா வகை பெருங்காயம் நம் நாட்டில் இல்லாததால் நம்மால் சொந்தமாக சமையல் பெருங்காயத்தை உருவாக்க முடியவில்லை
  3. மோடிஜி அவர்களின் பெரும் முயற்சியால் இமாலய உயிர் வள தொழில்நுட்ப நிறுவனம் ஈரானை சேர்ந்த ஃபெருளா வகையை இந்தியாவில் விளைவிற்பதற்கு ஹிமாச்சல ப்ரதேசத்தில் 300 ஹெக்டர் நிலத்தை அடையாளம் கண்டு, அக்டோபர் 17 அன்று முதல் நாத்துக்களை பயிரிட்டுள்ளது .
  4. இதன் மூலம் இந்தியாவிலேயே முதன்முறையாக பெருங்காயம் உள்நாட்டு விவசாயிகளால் விளைவிக்கப்பட்டு நமக்கு கிடைக்கும்
  5. சுமார் ரூபாய் 3 லட்சம் வரை ஒரு ஹெக்டருக்கு செலவு செய்தால் , 5 வருடங்களில் வருடத்திற்கு சுமார் ரூபாய் 10 லட்சம் வரை நிகர லாபம் விளைச்சல் தரும். மத்திய , மாநில அரசுகளின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியால் விவசாயிகள் இதில் பெரும் லாபம் பெற முடியும்.
  6. குளிர் பாலைவன பகுதிகளான ஹிமாச்சல ப்ரதேஷ் , லடாக் , காஷ்மீர் , உத்தரகன்ட் , அருணாச்சல ப்ரதேஷ் போன்ற பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு இது பெரும் வரப்பிரசாதம் ஆகும். முடியாது என்று பலர் நினைத்ததை முடியும் என்று நிரூபித்து கொண்டிருக்கும் மோடிஜியின் அரசு, ஏழை விவசாயிகளின் வாழ்விலும் , பாரதம் முழுவதிலும் நல் மணம் சேர்த்ததால் பெரும் ஆதாயம் ஆனது பெருங்காயம்.என அண்ணாமலை IPS தெரிவித்துள்ளார்.