இந்து நாடார், கிருஸ்தவ நாடார் என்று பாஜக பிரிவினையை உருவாக்கிறது.! ஹரி நாடார் ஆவேசம்.!

0
Follow on Google News

ஏப்ரல் 06, 2021, சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக, பாஜக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகள் தங்கள் கூட்டணியை உருதி செய்து வேட்பாளரை அறிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பனங்காட்டு படை கட்சி சார்பில் 44 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பனங்காட்டு படை கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தல் குறித்து இன்று செய்தியாளர்களை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சந்தித்தார். அப்போது பனங்காட்டு படை கட்சியின், தலைவர் ராக்கெட் ராஜா மற்றும் பனங்காட்டு படை கட்சியின், ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடாருடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

தேர்தலில் எல்லா கட்சிகளும் சாதியின் அடிப்படையில் தான் வேட்பாளர்களை பேட்டியிட நிறுத்துகின்றனர். ஆனால் அவர்கள் வெற்றி பெற்ற பிறகு சமுதாய மக்களை மறந்து விடுகிறார்கள். இதனால் பனங்காட்டு படை கட்சி சார்பாக நாங்களே நேரடியாக தேர்தலில் போட்டியிட களத்தில் இறங்கியுள்ளோம்.

பனங்காட்டு படை கட்சி பேட்டியிடும் தொகுதிகள்: தமிழகத்தில் 44, கேரளா 2, புதுச்சேரி போன்ற தொகுதிகளில் பனங்காட்டு படை கட்சி போட்டியிடுகிறது. இதில் ஹரி நாடார் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுவதாக கூறினார். எங்கள் பனங்காட்டு படை கட்சி தேர்தல் அறிக்கை இன்னும் 2 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று ஹரி நாடார் கூறியுள்ளார்.

கடைசியாக ஹரி நாடார் பேசும் போது பாஜகவையும் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். ஹரி நாடார் கூறும் போது நாங்கள் கும்பிடும் கடவுள், மதம் வேறாக இருந்தாலும் சமுதாயம் ஒன்றுதான். இந்து நாடார், கிருஸ்தவ நாடார் என்று பாஜக பிரிவினையை உருவாக்கிறது. உங்கள் எங்கள் எண்ணம் எங்களிடம் பலிக்காது என்று பாஜக கடுமையாக விமர்சனம் செய்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.