நடிகர் சூர்யாவின் சூரரை போற்று ஆஸ்கார் விருது பட்டியலில் இருந்து வெளியேற்றம். படக்குழுவினர், ரசிகர்கள் ஏமாற்றம்..

0
Follow on Google News

ஆஸ்கார் விருது பட்டியலில் இடம் பெற்ற சூரரை போற்று திரைப்படத்திற்கு ஆஸ்கர் பட்டியலில் இருந்து வெளியேற்றம். 93வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப். 26ம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. ஒரு பெண் இயக்குனர் சுதா கொங்கரா படைப்பில் நடிகர் சூர்யா, நடிகை பாலா முரளி நடித்து சூர்யா தயாரிப்பில் மிக பெரிய தொழில் அதிபரின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதனால் 2020 தீபாவளி பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியாக இருந்த சூரரைப் போற்று திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக அமேசான் பிரைமில் வெளியானது. ஒடிடி-யில் திரைப்படங்கள் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்கிற சிறப்பு விதியின் கீழ் ஆஸ்கர் போட்டிக்கான பட்டியலில் இடம்பிடித்தது சூரரைப் போற்று.

ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெற உத்தேச பட்டியல் போட்டியில் தொடர்ந்து 7 நாட்களுக்கு சூரரைப் போற்று திரையிடப்பட்டு, ஜூரிக்களால் தேர்வு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட சூரரை போற்று திரைப்படத்துடன் 366 திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்கான இறுதியில் போட்டியில் கலந்து கொண்டன என்ற பெருமை சூரரை போற்று திரைப்படத்திற்கு கிடைத்தது.

ஆனால் ஆஸ்காருக்கான விருதுக்கு தொடர்ந்து முன்னிலையில் இருந்த சூரரை போற்று திரைப்படம் தற்போது ஆஸ்கார் விருது பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்து உள்ளனர். தொடர்ந்து சூரரை போற்று திரைப்படம் ஏமாற்றத்தை சந்தித்து வருகிறது.