குடும்ப அரசியலுக்கு பாஜகவில் இடமில்லை..கர்நாடக பாஜகவின் புதிய முதல்வர் யார்.? எடியூரப்பாவின் அடுத்த நடவடிக்கை என்ன.?

0
Follow on Google News

பாஜக கட்சி விதிகளின் படி கட்சியை தனி நபர் யாரும் சொந்தம் கொண்டாட முடியாதபடி அந்த கட்சியின் விதிகள் அமைக்கப்பட்டிருக்கும். மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தலைவர்கள் மாற்றி அமைக்கப்படுவர். தனி ஒரு நபர் தொடர்ந்து அந்த கட்சியில் தலைமை பதவியில் இருக்க முடியாது, அதே போன்று வாஜ்பாய் தனது பிரதமர் பதவி முடிந்ததும் அடுத்த தலைவரான அத்வானிக்கு வழிவிட்டார். 2004 மற்றும் 2009 இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் அத்வனி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். இதன் பின்பு 2014 மோடி முன்னிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.

தற்போது கர்நாடக முதல்வராக இருக்கும் எடியூரப்பா வயது காரணமாக அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு முதல்வர் பதவியை விட்டு கொடுக்க வேண்டும் என பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 2012ம் ஆண்டு இதே போன்ற ஒரு விவகாரம் ஏற்பட்ட போது பாஜகவில் இருந்து விலகி தனியாக கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்த எடியூரப்பா வெறும் தொகுதிகளை மட்டுமே பெற்று சில வருடங்களில் மீண்டும் தன்னை பாஜகவில் இணைந்து கொண்டார்.

தற்போது எடியூரப்பா குடும்ப அரசியலுக்கு எதிராக கர்நாடகாவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதால். எடியூரப்பா மாற்றம் பாஜகவில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என கூறப்படுகிறது. எடியூரப்பா அரசியலுக்கு இடையூறாக இருப்பது அவருடைய இரண்டாவது மகன் விஜயேந்திரா. ஷிமோகா லோக்சபா எம்பியாக இருக்கும் எடியூரப்பா மூத்த மகன் ராகவேந்திரா அமைதியானவர். ஆனால் விஜயேந்திரா அடாவடியானவர்.

கடந்த 2018 கர்நாடக சட்டமன்ற தேர்தலி ல் வருணா தொகுதியில் போட்டியிட காத்திருந்த விஜயேந்திராவுக்கு கடைசி நிமிடத்தில் சீட் கொடுக்க மறுத்தார் அமி த்ஷா. இதனால் கோபம் கொண்ட விஜயேந்திரா ஆதரவாளர்கள் உடுப்பியில் அமித்ஷா தங்கி இருந்த ஹோட்டல் முன் இருந்த கார்களை உடைத்து அமித்ஷாவுக்கு எதிராக கோஷம் போட்ட சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து மாற்றம் செய்ய அவரது மகன் விஜயேந்திரா தான் முக்கியமான காரணம் என கூறப்படுகிறது. கர்நாடக ஆட்சியில் அதிகமாக விஜயேந்திரா தலையிடு இருப்பதை ஏற்று கொள்ளாத பாஜக, குடும்ப அரசியலுக்கு முற்று புள்ளி வைக்க எடியூரப்பாவை மாற்றம் செய்துவிட்டு புதிய முதல்வரை முன்னிறுத்தி வருகின்ற 2023 கர்நாடக சட்டமன்ற தேர்தலை சந்திக்க டெல்லி பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறபடுகிறது.

தற்போது எடியூரப்பாவை மாற்றம் செய்துவிட்டு புதிய முதல்வரை நியமித்து அவருடைய சிறப்பான செயல்பாடுகளால் எடியூரப்பாவை அரசியல் களத்தில் இருந்தே மறக்க வைத்து குடும்ப அரசியல் இல்லாத புதிய பாஜகவை கர்நாடகாவில் உருவாக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ள நிலையில் கர்நாடக பாஜக அரசின் அடுத்த முதல்வர் யார் என்கிற பரபரப்பு கர்நாடக அரசியலில் விவாதமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.