சொந்த ஊரிலே ஒன்பது ஓட்டு வாங்கிய ஜோதிமணி ஒரு ஓட்டு பற்றி பேசலாமா.? உங்க வரலாற்றை திரும்பி பாருங்க அக்கா.!

0
Follow on Google News

கோவை மாவட்டத்தில் காலியாக இருந்த 13 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சி 9 வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் பாஜகவை சேர்ந்த கார்த்திக் சுயேட்சையாக போட்டியிட்டார். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக தேர்தலில் பிரச்சாரம் ஏதும் செய்யவில்லை, மேலும் வேட்புமனு வாபஸ் வாங்கும் தேதி முடிவடைந்த நிலையில் வேட்புமனுவை வாபஸ் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் பிரச்சாரதில் ஈடுபடாததால், அவர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி யாருக்கும் தெரியாது.இந்நிலையில் சுயேட்சையாக போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த வேட்பாளர் கார்த்திக் 4 ஆவது வார்டை சேர்ந்தவர் என்பதால் அவர் உட்பட அவரது குடும்பத்தினர் யாருக்கும் அவர் போட்டியிட்ட 9 வார்டில் வாக்குகள் இல்லை.இந்நிலையில் கார்த்திக், கார் சின்னத்தில், சுயேச்சையாக போட்டியிட்டு இருந்த நிலையில் ஒரே ஒரு வாக்கை மட்டுமே பெற்றார்.

சுயேட்சையாக கார் சின்னத்தில் போட்டியிட்ட கார்த்திக் பாஜக வேட்பாளர் என்றும், அவர் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றார் என்றும், அவர் குடும்ப உறுப்பினர்கள் கூட அவருக்கு ஓட்டு போடவில்லை என சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வந்த நிலையில், கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, பாஜகவுக்கு ‘கொங்குநாடு’ கொடுத்த மகத்தான ஆதரவு இது என்றும் மேலும் ஒத்த ஓட்டு பாஜக என கிண்டல் செய்து பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கே.எஸ்.அழகிரிக்கு எதிராக ஜோதிமணி கடுமையாக சாடிய போது, ஜோதிமணி குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபண்ணா அறிக்கை ஓன்று வெளியிட்டிருந்தார் அதில், 2014 மக்களவை தேர்தலில் டெபாசிட் இழந்த ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கிய தலைவர்களை இழிவுபடுத்தலாமா ? ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. கோபண்ணா தெரிவித்துள்ளார்.

மேலும் அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் சொந்த ஊரிலேயே 9 ஓட்டு வாங்கிய ஜோதிமணிக்கு 2019ல் நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கியது தவறு என கே.எஸ் அழகிரிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சொந்த ஊரிலே 9 ஓட்டு வாங்கிய ஜோதிமணி சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் ஒரு ஓட்டு வாங்கியதை கிண்டல் செய்யலாமா என வலைதளவாசிகள் ஜோதிமணி எம்பி க்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.