ஆளுனருடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு … முக்கிய ஆவணங்கள் ஒப்படைப்பு.! உள்ளே போகும் திமுக முக்கிய புள்ளி யார் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழக ஆளுநர் R.N. ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து பேசி இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது. இதற்கு முன் தமிழக ஆளுநராக இருந்து பன்வாரிலால் புரோகிதரை எதிர்க்கட்சியாக இருந்த திமுக படாத பாடு படுத்தியது. இதனை தொடர்ந்து ஆரம்பத்தில் சுறு சுறுப்பாக சுழன்ற பன்வாரிலால் திமுகவின் அரசியல் விளையாட்டில் தாக்கு பிடிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் அமைதியாக ஆளுநர் மாளிகையில் முடங்கினர்.

இந்நிலையில் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றி பல்வேறு மாநிலக்களில் ஆளுநராக நியமிக்கப்பட்டு அங்கே பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய RN ரவி தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது ஆளும் கட்சியான திமுகவுக்கு வயிற்றில் புளியை கரைத்தது போன்று அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்க துறை விசாரணை நடந்து வருவது. மேலும் தனது தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளி கொலை வழக்கில் திமுக எம்பி ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பாஜக மூத்த தலைவர்களுடன் தமிழக ஆளுநரை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடலூர் முந்திரி ஆலையில் தொழிலாளி படுகொலை விவகாரத்தில் தி.மு.க. எம்.பி. ரமேஷ் சிக்காதிருக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அவர் சரணடைந்திருக்கும் நிலையில் இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடைபெறுகிறதா என்பதை தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும்.

நெல்லை மாவட்டம் கீழச்செவல் நயினார்குளம் பகுதியில் அடுத்தடுத்து 2 பேர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டனர். இதுபோன்ற கொடூர சம்பவங்கள் தி.மு.க. ஆட்சியில் அரங்கேறுகின்றன. எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை கையாள தமிழக அரசை வலியுறுத்த வேண்டும். நெல்லையில் பா.ஜ.க. நிர்வாகிகளை தாக்கிய ஞான திரவியம் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் அடங்கியிருந்தன.

இந்நிலையில் நேற்று அண்ணாமலை தமிழக ஆளுநரை சந்தித்த நிலையில் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆளுநரை சந்தித்துள்ளார், நேற்று பாஜக கொடுத்த புகார் குறித்து விளக்கம் கேட்க தான் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் ஆளுநர் சந்திப்பு நடைபெற்றிருக்கும் என கூறப்படும் நிலையில் குற்ற வழக்கில் சிக்கியுள்ள திமுக எம்பி, மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரை முதல்வர் காப்பாற்றுவது சாதாரண காரியமில்லை என தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடதக்கது.