புதுசேரி துணைநிலை ஆளுநராக பதவி ஏற்கிறார் இல.கணேசன்.!

0
Follow on Google News

கடந்த 2016ல் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டார். முன்னால் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த கிரண்பேடி விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் இணைந்தார், பின் 2016ல் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட பின் அங்கே ஆளும் காங்கிரஸ் கட்சி முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக தொடர்ந்து அவரது அதிகாரத்தில் இவர் தலையீடு செயப்படுவதாக குற்றசாட்டு எழுந்தது,

ஒரு கட்டத்தில் புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் என்ற சர்ச்சை துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கு இடையில் நீடித்து வந்தது. ஆளும் கட்சிக்கு எதிராக துணைநிலை ஆளுநர் செயல்படுவதாகக் கூறி ஆட்சியாளர்கள் பல்வேறு காலகட்டங்களில் எதிர்ப்பும், போராட்டமும் நடத்தியுள்ளனர். மேலும், கிரண் பேடியைத் திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசின் கவனம் ஈர்க்க தொடர் போராட்டத்தை நாராயணசாமி தலைமையில் ஆதரவாளர்கள் முன்னெடுத்தனர்.

இந்நிலையில், கடும் சர்ச்சைக்கு பின் கிரண் பேடியை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து நீக்குவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார், இதன் பின்பு அவருக்குப் பதிலாக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி துணை நிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்றும் அறிவித்து தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து தற்போது நடைபெற்ற புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கும் நிலையில், அவர்களுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகிக்கும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். இதன் பின்பு புதுச்சேரிக்கு நிரந்தரமாக ஆளுநர் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னால் தமிழக பாஜக தலைவரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசனுக்கு அந்த வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, புதுச்சேரியில் பதவி பிரமாணம் முடிந்து புதிய அரசு அமைந்ததும் இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை விரைவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.