குடும்ப அரசியல் பற்றி அமித்ஷா பேச்சு.!குழப்பத்தில் இருக்கும் திமுக தலைவர்களுக்கு பாடம் எடுத்த பேராசிரியர்.!

0
Follow on Google News

சமீபத்தில் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், இந்தியாவில் வாரிசு அரசியலைப் படிப்படியாக பா.ஜ.க ஒழித்து வந்திருக்கிறது. தமிழகத்திலும் அதை நாங்கள் செய்வோம் என்று பேசினார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட திமுக முன்னனி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர், ஸ்டாலின் இது குறித்து கூறுகையில்,அமித்ஷாவின் பேச்சு கண்ணாடி முன் நின்று கரடி பொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறுகையில்,அமித்ஷா வாரிசு அரசியல் பற்றி பேசியிருக்கிறார், அமித் ஷா அப்படி பேசும்போது, பக்கத்தில் இருக்கிற ஓ.பி.எஸ்-சும், ஜெயகுமாரும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டார்களாம். ஓ.பி.எஸ்-சின் மகன் எம்.பி-யாக இல்லையா? ஜெயகுமார் மகன் எம்.பி-யாக இருந்தாரே… அது வாரிசு அரசியல் இல்லையா? எந்த ஊரில் வாரிசு அரசியல் இல்லை? என துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமித்ஷா பேசிய வாரிசு அரசியல் பேச்சு பெரும் விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் அவர்களை நமது தினசேவல் நிருபர் தொடர்பு கொண்டு இதுகுறித்து அவருடைய கருத்தை கேட்ட போது, தமிழகம் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா வாரிசு அரசியல் குறித்து பேசியதற்கு திமுக தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர், பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் தான் வாரிசு அரசியல் செய்கிற கட்சிகள் என சில உதாரணங்களை தெரிவித்து வருகின்றனர், ஆனால் அவர்களுக்கு வாரிசு அரசியல் என்றால் என்ன என்பதே தெரியவில்லை என தெரிவித்த பேராசிரியர்.

மேலும், எதை வைத்து அரசியல் வாரிசு கட்சி என குற்றம் சுமத்துவதற்கு ஒரு அரசியல் பார்வை வேண்டும், ஒரு கட்சியின் முதன்மை குடும்பம் அந்த கட்சியின் தலைமையை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு, அவர்களின் வாரிசுகள் மட்டுமே அந்த கட்சியின் தலைமை பதவிக்கு வர முடியும் என்கிற நிலைமை இருந்தால் தான் அது வாரிசு அரசியல் என்று பொருள் என குறிப்பிட்ட பேராசிரியர்.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் விபத்தில் இறந்துவிட்டால், நடைபெறும் இடைதேரத்லில் இறந்த சட்டமன்ற உறுப்பினரின் மகள்,மகன் அல்லது மனைவியோ அந்த இடைதேர்தலில் போட்டியிட்டால் அது வாரிசு அரசியல் கிடையாது, அங்கே யார் போட்டியிட வேண்டும் என்பதை முடிவு செய்வது அந்த கட்சியின் தலைமை, ஆகையால் இங்கே இரு கட்சியின் தலைமை வாரிசு அரசியலாக வருவது தான் பிரச்சனை, கருணாநிதி குடும்பத்தை தவிர மற்றவர்கள் திமுகவின் தலைவராக வர முடியுமா.? இந்த சவாலை திமுக ஏற்று கொள்ள தயாரா.?என சவால் விடுத்த பேராசிரியர்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்புக்கு ராஜிவ் காந்தி குடும்பத்தை தவிர வேறு யாராவது வருவது பற்றி அந்த கட்சியால் சிந்திக்க முடியுமா.? அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு வந்தவர்களில், ஜெலயலலிதா, பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி போன்றோர் வாரிசு அடிப்படையில் தலைமை பொறுப்புக்கு வந்தவர்கள் கிடையாது, ஆகையால் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியில் தான் வாரிசு அரசியல் செய்கிறார்கள், திமுகவில் முக அழகிரிக்கு கூட இடமில்லாத அளவுக்கு ஸ்டாலின் குடும்பம் அங்கே கோலோச்சி கொண்டிருக்கிறது, கனிமொழியை கூட திமுக ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை சகித்து கொண்டதாக தெரிகிறது, ஆகையால் வாரிசு அரசியல் பற்றி பேசுவதற்கோ, பாஜக பற்றி விமர்சனம் செய்யவோ திமுகவுக்கு எந்த ஒரு அருகதையும் இல்லை என பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் வாரிசு அரசியல் பற்றி திமுக தலைவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார்.