துரைமுருகன், T. R. பாலுவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி…… எல்.முருகன், அண்ணாமலைக்கு ஏன் வாழ்த்து சொல்லல.? திமுகவின் அபிமானியா ரஜினிகாந்த்.?

0
Follow on Google News

1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இருந்து 2021 சட்டசபை தேர்தல் வரை ரஜினியின் அரசியல் வாய்ஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. திமுகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் நடிகர் ரஜினிகாந்த், 1996 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் கொடுத்த வாய்ஸ் அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக இருந்தது, அப்போது ரஜினி ஆதரவு திமுகவுக்கு கிடைக்காமல் போயிருந்தால் திமுக தோல்வியை தழுவியிருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் 1996 சட்டசபை தேர்தலுக்கு பின் தான் நடிக்கும் படங்களில் அரசியல் வசனம், அவ்வப்போது ரஜினிகாந்த் இதோ அரசியலுக்கு வர போகிறார் என பரபரப்பை ஏற்படுத்தி அவர் நடித்த படங்கள் தான் ஒவொன்றாக வெளியானதே தவிர, அவர் அரசியலுக்கு வருவதாக தெரியவில்லை, ஒரு கட்டத்தில் இனி தலைவர் அரசியலுக்கு வர மாட்டார் என அவரது ரசிகர்கள் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த, முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அரசியல் அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்புக்கு பின் திமுகவினர் மத்தியில் இருந்து அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது, திமுகவினர் மத்தியில் ரஜினிகாந்த் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்ட நிலையில், ரஜினி ரசிகர்கள் மற்றும் திமுகவினர் இடையில் சமூக வலைதளத்தில் கடும் சண்டை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இது ஒரு பக்கம் இருக்க ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் செய்து கொண்டே இருந்தாரே தவிர, அவரது அரசியல் அறிவிப்பு அறிவிப்பாகவே இருந்தது.

இந்நிலையில் சும்மா இருந்த ரசிகர்களை நான் அரசியலுக்கு வருவது உறுதி, 2021 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி என உசுப்பேத்திவிட்டு தேர்தலுக்கு சில மாதங்களில் கொரோனவை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என ரஜினிகாந்த் அறிவிப்பு அவரது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. இந்நிலையில் தி.மு.க.வின் பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும்.

திமுக பொருளாராக டி.ஆர். பாலு தேர்தெடுக்கப்பட்ட போதும், வாழ்த்து தெரிவித்து வந்த ரஜினிகாந்த், பட்டியல் சமூகத்தை சேர்ந்த பாஜகவை சேர்ந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகவும், 36 வயது இளைஞர் அண்ணாமலை IPS பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு இதுவரை ரஜினிகாந்த் ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என தமிழக அரசியலில் பரபரப்பான கேள்விகள் எழுந்துள்ளது குறிப்படத்தக்கது.