கணவனின் கள்ளக்காதலியை கூலிப்படையை வைத்து கற்பழித்து வீடியோ எடுத்த மனைவி..!

0

தெலுங்கானா : கள்ளக்காதலால் பாதிக்கப்பட்ட மனைவி எடுத்த விபரீதமான முடிவு ஒரு குடும்பத்தையே சீரழித்துள்ளது அந்த மாநிலத்தையே திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. எவ்வளவு அறிவுரைகள் வழங்கினாலும் சில நிலைகெட்ட மனிதர்கள் திருந்தமாட்டார்கள் எனபதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே அமைந்துள்ளது கொண்டாபூர் கிராமம். அங்கு காயதிரியும் அவரது கணவரும் அழகாக குடும்பம் நடத்திவந்தவேளையில் ஒரு பூகம்பம் அவர்களது வாழ்வில் நுழைந்தது. கணவர் சிவில் சர்விஸ் பரீட்சைக்கு தயாராகி வந்தார். அதேபகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் இதே தேர்வுக்கு தயாராகி வந்தவேளையில் சந்தேகங்களை தீர்க்கவும் பாடங்களை பகிர்ந்துகொள்ளவும் நட்பு ரீதியாக அறிமுகமாகியுள்ளனர்.

இப்படி சீராக நட்பு சென்றுகொண்டிருந்த வேளையில் காயத்ரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால் காயத்ரி உதவிக்கு அந்த பெண்ணை அழைத்ததோடு தனது வீட்டிலேயே தங்கவைத்தார். இந்த நேரத்தில் அந்தப்பெண்ணுக்கும் கணவருக்குமான நட்பு காதலாகி உடல்ரீதியான உறவு ஏற்பட்டுள்ளது. இந்த வருடம் பிப்ரவரி மாதம் வரை அதுதொடர்ந்துள்ளது.

இது அரசல்புரசலாக காயத்திரி காதுகளுக்கு வரவே காவல்நிலையம் வரை சென்று இருவரையும் அதட்டியுள்ளார். அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத காயத்ரி நேற்று, புகாரை வாபஸ் வாங்கவேண்டும் அதனால் உன்னுடன்பேச விரும்புகிறேன் என அழைத்துள்ளார். நம்பி அந்த இளம்பெண் சென்றுள்ளார். சிறிதுநேரம் வழக்கை பற்றி பேசியுள்ளார்.

பின்னர் அந்த பெண்ணை ஒரு அறைக்கு அழைத்துசென்றுள்ளார். அங்கெ தான் விபரீதம் அரங்கேறியது. அந்த ரூமில் நான்கு கூலிப்படையினர் தயாராக இருந்துள்ளனர். அந்த பெண் உள்ளே வந்ததும் வாயை கட்டிவிட்டு கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளன. மேலும் அந்த சம்பவத்தை காயத்ரி வீடியோவும் எடுத்துள்ளார் வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாகவும் கூறியுள்ளார்.

நான்குபேரால் பலாத்காரத்திற்கு ஆளான அந்த பெண்ணின் உடல்நிலை மோசமாகவே பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கே நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த பயங்கரம் வெளிவந்துள்ளது. அதையடுத்து போலீசாருக்கு தகவல் பறக்க அவர்கள் காயத்ரி மற்றும் அந்த நான்கு கயவர்களையும் கைதுசெய்துள்ளனர்.

ஒரு பெண்ணே கூலிப்படையை ஏவி இன்னொரு பெண்ணை கற்பழிக்க வைத்த இந்த கொடூர செயல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. மேலும் கணவர் சிவில்சர்வீஸ் பரீட்சைக்கு தயாராகி கொண்டிருப்பதால் அவரின் சுயவிவரங்களை போலீசார் வெளியிட மறுத்துள்ளனர்.