அணில்கள் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி மின்சாரம் தடை இருக்காது ..! மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் நக்கல்…

0
Follow on Google News

ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக தணிக்கை துறை கூறியதே. அதற்காக ஆ.ராசா, கனிமொழி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தி.மு.க.வுக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார். விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு தெரிந்தே தமிழ்நாட்டு மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றி வருகிறது. திமுக அரசின் இதுபோன்ற செயல்களால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள், கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

அ.தி.மு.க ஆட்சி காலத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறும் திமுக அரசு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் மீது ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக தணிக்கை துறை கூறியதே. அதற்கு ஆ.ராசா மீதும், கனிமொழி மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை குழப்ப வேண்டாம். உயர்நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு திமுக அரசு என்ன பதில் சொல்ல போகிறது. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பின்பும் இன்னும் ஏன் மக்களை ஏமாற்றி வருகிறீர்கள்.

திமுக ஆட்சியில் மின்சாரம் இல்லை. கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் முறையான உணவு இல்லை. இதுபோன்ற பிரச்சனை சரி செய்ய பாருங்கள். மின்சாரத்துறை சிறப்பாக உள்ளது. அணில்கள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி மின்சாரம் தடை இருக்காது என்று மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்ததற்கு நன்றி. இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.