ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்ற சசிகலா தியாகி என்றால்.? சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார்.?

0
Follow on Google News

நாகப்பட்டினத்தில் பாஜக மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் எதிராக பாஜக செயல்பட்டு வருவதாக திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் அவதூறு பரப்புகின்றன்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் என்ன செய்திருக்கிறது என மு.க. ஸ்டாலின் கேட்கிறார்.

இத்தருணத்தில் திமுகவும், ஸ்டாலினும் தமிழகத்துக்கு என்ன செய்திருக்கின்றனர் என்பதை பகிரங்கமாக விவாதிக்க ஸ்டாலின் முன்வரவேண்டும்.ஸ்டாலின் அல்லது திமுகவினர் யார் வேண்டுமானாலும் விவாதம் நடத்த வரச்சொன்னாலும் நாங்கள் வரத்தயார். எங்கு, என்ன தேதி என்பதை தெரிவிக்க வேண்டும் என சவால் விடுத்த பேராசிரியர், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக தமிழக பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறும்.

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சியை தந்து கொண்டிருக்கிறார். அவரது சிறப்பான ஆட்சியை தமிழக பாஜக பாராட்டுக்கிறது. தமிழக அரசுக்கும், பாஜகவுக்கும் எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட பொய்ப் பிரசாரங்களால் கடந்த மக்களவைத்தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறமுடிந்தது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் பொய்ப் பிரசாரம் மக்களிடம் எடுபடாது. மக்களும் திமுகவை நம்பத் தயாராக இல்லை.

தமிழகத்தில் குறிப்பிட்ட அளவிலான பாஜ எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வார்கள். அதிமுக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். முதல்வரின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் ஒரே மாநிலம் புதுச்சேரிதான். அதுவும் வரும் தேர்தலில் மாறிவிடும் என தெரிவித்தவர், சசிகலா விடுதலை குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர்.

சசிகலாவை தியாகத்தலைவி என்று மக்கள் கொண்டாடவில்லை, ஒரு கட்சியினர் தான் கொண்டாடுகின்றனர். சசிகலாவால் தமிழக அரசியலில் எவ்வித மாற்றமும் ஏற்படபோவதில்லை. தியாகம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருந்து வருபவர் தியாகியா? என கட்டமாக கேள்வி எழுப்பிய பேராசிரியர், சசிகலா தியாகி என்றால், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற வா.உ.சிதம்பரனார் பிள்ளை, பசும்பொன் தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், வாஞ்சிநாதன், மற்றும் பாரதி போன்ற தலைவர்களை எப்படி அழைப்பது என பேராசியர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.