ஆஹா காய்கறிகள்! ஓஹோ பயன்கள்! தினந்தோறும் பயன்படுத்தும் காய்கறிகளில் உள்ள பயன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.!

0

அனைவருக்கும் வணக்கம் , ஆஹா காய்கறிகள்! ஓஹோ பயன்கள்! பகுதிக்கு உங்களை வரவேற்கிறேன். இப்பகுதியில் நாம் காய்கறிகளில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். இந்த பகுதி நிச்சயம் நமக்கு பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கிறேன். நாம் தினந்தோறும் பயன்படுத்தும் காய்கறிகளில் உள்ள பயன்களைப் பற்றி இப்பகுதியில் விரிவாக தெரிந்து கொள்வோம். வாங்க போகலாம்!!

 1. முட்டைகோஸ்
  ★முட்டைகோஸை ஜூஸ் போட்டு குடித்தால் அல்சர் குணமாகும்.
  ★உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட வேண்டும்.
  ★முட்டைகோஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இவை செரிமான மண்ட‌லத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்‌சனையை குணமாக்கும்.
  ★மேலும் உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய் ஆகியவற்றை குணப்படுத்தும்.
  ★காலையில் தினமும் வெறும் வயிற்றில் பருகினால் உடல் கொழுப்பு கரையும்.
 1. பாகற்காய்
  ★நரம்புகள் வீரியம் பெறும்.
  ★விஷம் முறியும். வயிற்றுப்பூச்சிகள், புழுக்கள் அழியும்.
  ★மூலவியாதி, கல் அடைப்பு சரியாகும்.
  ★பாதரச முறிவாகப் பயன்படுகிறது.
  ★நீரிழிவுப் பிணியாளர்களின் அதி அற்புத மருந்து.
  ★கல்லீரல் வீக்கம் சரியாகும்.
  ★பிற மருந்துகள் சாப்பிடுபவர்கள் இயற்கை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பாகற்காய் சாப்பிடலாம்.
 2. முள்ளங்கி
  ★முள்ளங்கி சிறுநீரைப் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும்.
  ★இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும்.
  ★சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும்.
  ★முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை கொடுக்கச் சிறுநீரகக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும்.
  ★இலைச்சாற்றை 5 மி.லி. ஆக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும்.
 3. சுரைக்காய்
  ★பெண்களுக்கு பால் சுரப்பில் நல்ல பலன் தரும்.
  ★உடல்சூடு, மலச்சிக்கல், வயிற்றுவலி, வயிற்றுப் புண் சரியாகும்.
  ★உடல் குளிர்ச்சி பெறும்.
  ★மூல வியாதி விலகும். இரத்தம் சுத்தமடைந்து சிறுநீர் எரிச்சல் நீங்கும்.
  ★உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இவைகளுக்கு அருமையான மருந்து.
  ★உடல் பருமன், அதிக கொழுப்பு இவைகளுக்கு சுரைக்காய் சாறு அருந்த வேண்டும்.
 4. பீ‌ன்‌ஸ்
  ★பீ‌ன்‌ஸ் அவரை வகையை‌ச் சே‌ர்‌ந்த ‌பீ‌ன்‌ஸ் ‌நீ‌ரி‌ழிவு ம‌ற்று‌ம் இதய ‌வியா‌தி‌யி‌ன் ‌தீ‌விர‌த்தை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் த‌ன்மை கொ‌ண்டதாக உ‌ள்ளது.
  ★தொட‌ர்‌ந்து சோயா‌பீ‌ன்‌ஸ் உணவுகளை‌ச் சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தால் அது கொழு‌ப்பை‌க் குறை‌ப்பதுட‌ன், ர‌த்த‌த்‌தி‌ல் குளு‌க்கோ‌சி‌ன் அளவையு‌ம் க‌ட்டு‌‌க்கு‌ள் வை‌த்‌திரு‌க்‌கிறது என தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.
  ★‌பீ‌ன்‌ஸ் எ‌வ்வாறு ‌நீ‌ரி‌ழிவையு‌ம், இதய நோயையு‌ம் க‌ட்டு‌ப்படு‌த்து‌கிறது எ‌ன்று த‌ற்போதுதா‌ன் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.
  ★அதாவது, ‌பீ‌ன்‌சில் இசோ‌பிளவோ‌ன்‌ஸ் என‌ப்படு‌ம் உ‌யி‌ர்‌‌த்தாது‌க்க‌ள் உ‌ள்ளன.
 5. சுண்டைக் காய்
  ★சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.
  ★சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும்.
  ★இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.
 6. கத்தரிக்காய்
  ★இதில் விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து இருக்கிறது.
  ★ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்க வைக்கும்.
  ★நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும்.
 7. முருங்கைக்காய்
  ★கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி உள்ளன. ★குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.
  ★நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.
 8. மாங்காய்
  ★நார்ச்சத்து, விட்டமின் ஏ உள்ளன.
  ★மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
  ★தாது பலம் பெறும்.
  ★செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும்.
  ★பசியைத் தூண்டும்.
 9. அவரைக்காய்
  ★உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து உள்ளன.
  ★நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு.
  ★உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.
 10. அத்திக்காய்
  ★விட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து உள்ளன.
  ★மூலநோய் உள்ளவர்களுக்கு.
  ★மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும்.
  ★மூலநோய் வராமல் தடுக்கும்.
 11. பீர்க்கங்காய்
  ★நீர்ச்சத்தும் தாது உப்புகளும் உள்ளன.
  ★உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
 12. கோவைக்காய்
  ★விட்டமின் ஏ இருக்கிறது.
  ★நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
  ★வாய்ப்புண், வயிற்று ரணம், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றை போக்கும்.
 13. புடலங்காய்
  ★உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து.
  ★மூலநோய் உள்ளவர்களுக்கு நல்லது.
  ~நன்றி, மதுரை கற்பகம்