மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை… ஒன்னும் சமாளிக்க முடியவில்லை… விஜய் டிவி விற்பனையாகிறது…

0
Follow on Google News

இந்த விஜய் டிவியின் உண்மையான பெயர் ஸ்டார் விஜய் ஆகும். இத்தொலைக்காட்சி 1994-ஆம் ஆண்டு நா. பா. வா ராமஸ்வாமி உடையாரால் விஜய் டிவி என்னும் பெயரில் நிறுவப்பட்டது. இன்று வரை மக்களும் விஜய் டிவி என்று தான் கூறுகிறார்கள். பின்னர் இத்தொலைக்காட்சி நிறுவனம் விஜய் மல்லையா மற்றும் ஃபாக்ஸ் சர்வதேச சேனல்கள் எனக் கைமாறி 2001-ஆம் ஆண்டு ரூபர்ட் முர்டோக்கின் ஸ்டார் நிறுவனத்தால் வாங்கப் பட்டது.

ஸ்டார் குழுமம் விஜய் டிவியை வாங்கிய பின்னர் அதை ஸ்டார் விஜய் என்று மாற்றம் செய்தது. மேலும் உலக அளவில் விஜய் டிவியை பிரபலமடைய செய்தது. அதன் பின்னர் ஸ்டார் விஜய் டிவியை டிஸ்னி நிறுவனம் கைப்பற்றியது. டிஸ்னி நிறுவனம் விஜய் டிவியையும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தையும் வெற்றிகரமாக நடத்தி குறிப்பாக விஜய் டிவி மிக பெரிய அளவில் பிரபலமாக வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது, அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் தான், ஒரு காலத்தில் சன் டிவி தான் மக்களின் தேர்வாக இருந்த காலத்தில், அதை உடைத்து தன் பக்கம் மக்களை இழுத்து சன் டிவிக்கு சவாலாக விளங்கியது விஜய் டிவி.

ஆனால் காலப்போக்கில் விஜய் டிவியை போன்று சன் டிவியிலும் ரியாலிட்டி ஷோ க்கள் ஒளிபரப்பப்பட்டது, மேலும் விஜய் டிவி பார்முலாவை பின்பற்றி ஜீ தமிழும் மக்கள் ஆதரவை பெற்றது. இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் ஓரு சில நிகழ்ச்சியை தவிர்த்து, மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு கடந்த சில காலமாக இல்லை என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதற்ககு உருட்ட விஜய் டிவியிடம் சரக்கும் தீர்த்து போய்விட்டதாக மக்களுக்கு அலுப்பு தட்டி, மற்ற சேனலை மாற்றும் அளவுக்கு நிகழ்ச்சிகள் மொக்கையாக சென்று கொண்டிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், விஜய் டிவியை திடீரென்று விற்பனை செய்யவுள்ளதாக டிஸ்ணி நிறுவனம் அறிவித்துள்ளது.

டிஸ்னி நிறுவனம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தை மட்டும் வைத்துக் கொண்டு விஜய் டிவியை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளது. விஜய் டிவியை விற்பனை செய்வதாக டிஸ்ணி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதையடுத்து விஜய் டிவியை வாங்குவதற்கு மூன்று முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டியில் இறங்கியுள்ளனர்.

உலகில் முன்னணி நிறுவனங்களான ஜியோ, டாடா, சோனி இந்த மூன்று நிறுவனங்களும் விஜய் டிவியை வாங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஜியோ கால் வைக்காத துறையே இல்லை. கிடைக்கிற கேப்ல எல்லாம் அம்பானி தன் தொழிலை விரிவுபடுத்திக் கொண்டே தான் இருக்கிறார். எனவே விஜய் டிவி வாங்குவதன் மூலம் பொழுதுபோக்கு துறையில் மிகப்பெரிய கால் பதிக்க முடியும் என்று அவர்கள் பிளான் செய்து வருகிறார்கள்.

அதேநேரம் டாடாவும் அந்தப் போட்டியில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் சோனி நிறுவனமும் விஜய் டிவியை வாங்குவதற்கு மும்முறமாக உள்ளது. ஏற்கனவே சோனி நிறுவனம் விளையாட்டிற்கு பொழுதுபோக்கிருக்கு என்று பல சேனல்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த மூன்று நிறுவனங்களில் அதிக விலை கொடுத்து யார் வாங்கப் போகிறார்கள் என்பது தான் தற்போது மிகப்பெரிய பேச்சுப் பொருளாக உள்ளது.