ரஜினியை கதற கதற வெச்சு செய்யும் ப்ளு சட்டை மாறன்… வயசுக்கு கூட மரியாதை இல்லாம போச்சு…

0
Follow on Google News

பல பேர் சினிமா விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் அதில் தனக்கென்று ஒரு அடையாளத்தை படைத்தவர் தான் ப்ளூ சட்டை மாறன். படம் பார்க்கிறார்களோ இல்லையோ இவரின் விமர்சனத்தை கண்டிப்பாக பார்த்து விட வேண்டும் என்று ஒரு கூட்டமே உள்ளது. ‌ இவரும் விமர்சனம் என்ற பெயரில் ஒரு படத்தின் குறைகளை மட்டுமே சொல்லுவார்.

அதே நேரத்தில் தங்களுக்கு பிடித்தமான ஹீரோக்களின் படங்களை பற்றி இவர் கலாய்த்து பேசும்பொழுது, அந்த ஹீரோவின் ரசிகர்களிடம், கமெண்ட்கள் மூலமாக பெரும் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருபவர் ப்ளூ சட்டை மாறன். தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பேச்சு பொருளானது அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது தான். இதனால் விஜய் மற்றும் ரஜினி இடையே நடந்து வந்த பனிப்போர்.ஜெயிலர் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினியின் பேச்சுக்கு பின்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கலாநிதிமாறன், 72 வயதிலும் ரஜினிகாந்த் வீட்டின் வாசலில் தயாரிப்பாளர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள், உங்களுக்கு 72 வயதாகும் போது அதே மாதிரி தயாரிப்பாளர்கள் காத்து கொண்டிருந்தால் அப்போது சொல்லுங்க நீங்க தான் சூப்பர் ஸ்டார் என்று கலாநிதி மாறன் பேசியதற்கு, 72 வயதானாலும் கெத்தாக நடிக்கிறார் தலைவர் என ரஜினி ரசிகர்கள் பயர் விட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்காக ரஜினியையம் அவருடைய ரசிகர்களை சீண்டு வகையில் ப்ளூ சட்டை மாறன் அவருடைய டிவீட்டரில், 72 வயது ஆனாலும் தலைவர் இன்னும் கெத்தாக நடிக்கிறார். இந்தியாவில், ஏன்  ஆசியாவிலேயே எந்த நடிகராவது இந்த வயதுவரை நடிக்க முடியுமா? என பருந்துக்குஞ்சுகள் கூறுவதாக மறைமுகமாக ரஜினி ரசிகர்களை பருந்து குஞ்சு என குறிப்பிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன். மேலும் அவர் தெரிவித்ததாவது, எதுக்கு அவ்வளவு தூரம் போகனும்? தமிழ்நாட்லயே உண்டு. தனது 86 வயதுவரை.. தமிழ் சினிமாவில் பல்வேறு வேடங்களில் அசத்திய நடிகர் ஒருவர் உண்டு.

நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த பெருங்கலைஞர். சில குறிப்பிடத்தக்க படங்கள்: பைத்தியக்காரன் 1947 (Debut Film), மணமகள், மனோகரா, துளி விஷம், மங்கையர்க்கரசி, கப்பலோட்டிய தமிழன்,  தேவர் மகன், மே மாதம், வியட்நாம் காலனி, மனதை திருடி விட்டாய், வசூல் ராஜா MBBS. அவரது பெயர்: ‘காக்கா’ ராதாகிருஷ்ணன்.” என ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒரு துணை நடிகருக்கும் ஒரு படத்தையே தனது தோள்களில் சுமப்பவருக்கும் வித்தியாசம் உள்ளது, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேல் முன்னிலை வகிப்பது இன்று இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்வது தனக்கான இடத்தை தக்க வைப்பது என்பது சாதனையே, இந்த வயதிலும் அவரால 30 நிமிடங்கள் மொத்த ஆடியன்ஸையும் தனது பேச்சினால் கட்டிப்போட முடிகிறது என்றால் அது மிகப்பெரிய சாதனை.

இதையெல்லாம் கடந்து ரஜினி என்கிற தனி நபர் ஒரு சகாப்தம் என ப்ளூ சட்டை மாறனுக்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பதில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சில நாட்களுக்கு முன்பு வியாபார அடிப்படையில் கோலிவுட்டின் முதல் நான்கு ஹீரோக்களின் பட்டியலை ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதில் அவர் நடிகர் விஜய் முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் கமல்ஹாசனும், மூன்றாவது இடத்தில் தல அஜித்தும் இருந்த நிலையில், நான்காவது இடத்தில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை குறிப்பிட்டு பதிவை போட்டிருந்தார். அந்தப் பதிவும் ரஜினி ரசிகர்களிடமிருந்து பல எதிர்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.