கொய்யாலே… அடி வெளுத்து விடுவேன்… விஜயகாந்த் சமாதியில் இருந்து ஓட ஓட விரட்டப்பட்ட TTF வாசன்..

0
Follow on Google News

Twin throttlers எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். நெடுஞ்சாலைகளில் கூட பைக்கில் அதிவேகமாக செல்வது, சாகசங்களை நிகழ்த்துவது என பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பாட்டு வந்த நிலையில், செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனது பைக்கில் வாசன் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற பைக் விபத்தில் சிக்கி பைக் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் சிக்கினாலும் வாசன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து, நீதிபதி, டிடிஎஃப் வாசனின் பைக்கை எரிக்கும்படியும், அவரது யூட்யூப் சேனலை மூடவேண்டும் எனவும் கடுமையாகப் பேசி, ஜாமீனை நிராகரித்தார். மேலும் 10 ஆண்டுகளுக்கு அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டது, சுமார் 40 லட்சம் ஃபாலோய்ஸ்களுடன் இயங்கும் தனது யூடியூப் சேனல் முடக்கப்பட்டால் வருமானத்துக்கு என்ன செய்வது என திகைத்து நின்ற TTF Vasan.

டிடிஎஃப் ஆட்டோ மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் என ஒரு கம்பெனி ஒன்றை தொடங்கியவர் அதிலும் நேர்மையாக சம்பாரிக்காமல், பல தில்லாங்கடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இன்றைய நவீன உலகில் மக்களை பல வகையில் ஏமாற்றி சுரண்டி சம்பாதிப்பதில் பல விதங்கள் உண்டு. அதில் டிடிஎப் வாசன் ஒரு விதத்தை கையாண்டுள்ளார்.

உதாரணத்திற்கு ஒரு பலசரக்கு கடையில் சென்று ஒரு பொருளை முப்பது ரூபாய் கொடுத்து வாங்கினீர்கள் என்றால், அதே பொருள் ஒரு பாக்கெட் போட்டு ஒரு பிரபலமான கம்பெனி பெயருடன் விற்பனை செய்தால் அது 50 ரூபாய் விற்று, உங்கள் தலையில் மிளகாய் அரைத்து விடும் கார்பொரேட் நிறுவனங்கள். இப்படி மக்களை பல வகையில் ஏமாற்றி போர்ஜரி செய்து சம்பாதிக்கும் ஒரு தொழிலை தான் டிடிஎஃப் வாசன் செய்து தற்பொழுது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இணையத்தில் 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய இருசக்கர வாகனங்களுக்கு பொருத்தக்கூடிய ஜிபிஎஸ் கருவியை, மொத்தமாக வாங்கி, அதில் டிடிஎஃப் என்று லோகோவை பொருத்தி, கவர்ச்சிகரமான அட்டைப்பெட்டியில் அடைந்து சுமார் 3500 வரை விற்பனை செய்து மக்களை ஏமாற்றி வருகிறார் டிடிஎஃப் வாசன் என்று அந்த பொருளை வாங்கியவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.

அதுவும் அந்த பொருள் 7000 ரூபாய் என்றும் 50 சதவீதம் ஆஃபர் அடிப்படையில் 3500 ரூபாய் என இணையதளத்திலேயே 1500 ரூபாய் விற்கக்கூடிய ஒரு பொருளை 3500 ரூபாய்க்கு விற்பனை செய்து மக்களை ஏமாற்றி வருகிறார் டிடிஎஃப் வாசன், அதாவது இவர் ஒரு விஞ்ஞானி போன்றும் , இவரே சுயமாக அந்த ஜிபிஎஸ் கருவியை கண்டுபிடித்து அதை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து, 3500 ரூபாய்க்கு விற்பனை செய்வது போன்று பில்டப் கொடுக்கும் டிடிஎஃப் வாசன்.

இணையதளத்தில் விற்கக்கூடிய 1500 ரூபாய் பொருளை, இவர் மொத்தமாக வாங்கும்பொழுது கண்டிப்பாக 800 ரூபாய் இருந்து 900 ரூபாய்க்கு தான் வாங்கி இருப்பார், அப்படி 900 ரூபாய்க்கு வாங்கக்கூடிய பொருளை டிடிஎஃப் லோகோ முத்திரை குத்தி 3500 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார் டி டி எ வாசன், சமீபத்தில் மறைந்த விஜயகாந்த் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்பு சமாதிக்கு வெளியே வந்து மக்களுடன் செல்பி எடுத்து கொண்டிருந்தார் டிடிஎஃப் வாசன். இதை அங்கிருந்த விஜயகாந்தின் ரசிகர் ஒருவர் பார்த்து கடுங்கோபமடைந்த அவர், செல்பி எடுக்குற இடமா இது, யாரா இருந்தாலும் அடிச்சிடுவேன் பாத்துக்கோங்க என டிடிஎஃப் வாசனை பார்த்து கோபத்தில் கொந்தளிக்க, அய்யோ.. இடத்தை காலி பண்ணுடா என வடிவேலு காமெடி காட்சியில் வருவதற்கு முன்பு, எங்கே அந்த விஜயகாந்த் ரசிகர் அடித்தாலும் அடித்துவிடுவார் என நைசாக தப்பித்து ஓடியுள்ளார் டிடிஎஃப் வாசன்.